இந்திய செய்திகள்

அம்பானி வீட்டின் செல்லபிள்ளை ஆனந்த் ஜெயின்.. திருபாய் அம்பானியின் 3வது மகன் போன்றவர்.. யார் இவர்..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டீர்ஸ் குழுமத்தின் ஆடம்பக்கட்டத்தில் இருவ்து அம்பானி குடும்பத்துடன் நெருங்கி பழகியவர் ஆனந்த் ஜெயின்.

முகேஷ் அம்பானி உடன் பிடித்தவர் என்பது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு மத்தியில் விரிசல் வரவும் ஆனந்த் ஜெயின் தான் காரணம் என பலருக்கும் கூறப்படும் இதே வேளையில், திருபாய் அம்பானியின் 3வது மகனாக வளம் வந்தவர் இந்த ஆனந்த் ஜெயின்.

ஜெய் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் ஜெயின் சுமார் 30 வருடம் வர்த்தக துறையில் அனுபவம் கொண்டவர், ஆனந்த் ஜெயின் ரியல் எஸ்டேட், பைனான்ஸ், கேப்பிடல் மார்கெட்-ல் அதிகப்படியான அனுபவம் கொண்டவர்.

2007 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடத்திற்கு வந்தது மூலம் ஆனந்த் ஜெயின் இந்தியா முழுவதும் பிரபலமானார். தற்போது இந்திய ஆன்லைன் கேமிங் சந்தையை கலக்கும் டிரீம் 11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஹர்ஷ் ஜெயின், ஆனந்த் ஜெயினின் ஓரே மகன் ஆவார். 1980 களில் இருந்து ரிலையன்ஸ் குழுமத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் ஜெயின், திருபாய் அம்பானி இந்திய டெலிகாம் சந்தையில் 500 ரூபாய்க்கு செல்போன் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தின் தினசரி ஆப்ரேஷன்களை வழிநடத்தியவர் ஆனந்த் ஜெயின். இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கிய பதவிகளில் இல்லையென்றாலும் ரிலையன்ஸ் உயர்மட்ட நிர்வாக குழுவில் டைரெக்டர் பதவியிலும், Sir H. N. Reliance Foundation Hospital and Research Centre நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button