
எலக்ட்ரிக் கார்-களின் சுடுகாடு.. அதிர வைக்கும் உண்மை..!
பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை, அதன் மூலம் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் ஆதிக்கத்தை குறைக்க மேற்கத்திய நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களின் ஊக்குவிப்பு ஆகியவை மூலம் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று 99 சதவீதம் உறுதியாகியுள்ளது
தற்போது எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அதன் விலை. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் பெரும் பகுதி அதன் பேட்டரி பேக்கேஜ் அடிப்படையில் இருக்கும் காரணத்தால் லித்தியம் உலோகம் முதல் பல்வேறு உலோகங்களின் விலை இதில் அதிகம் பாதிக்கப்படும்
இந்த நிலையில் உலகளவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியிலும், தயாரிப்பிலும் முன்னோடியாக இருக்கும் சீனா-வில் எலக்ட்ரிக் கார்-களின் சுடுகாடு இருப்பதை ஒரு யூடியூபர் கண்டுப்படித்துள்ளார். இந்த வீடியோ மூலம் எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் எப்படி சீன அரசையும் முதலீட்டாளர்களையும் ஏமாற்றுகிறது என வெளிச்சத்திற்கு வந்துள்ளது
பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தால் மக்கள் கட்டாயம் வாங்கமாட்டார்கள். இதனால் மக்களுக்கு, உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏதுவான சூழ்நிலையை எலக்ட்ரிக் வாகன சந்தையில் உருவாக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் அதிகப்படியான மானியம் கொடுத்து வருகிறது.