
கபில்தேவ் போலவே ஒரு கேட்ச்.. அஸ்வினின் மிரட்டலான ஃபில்டிங்.. 36 வயதில் அபாரம்!
திண்டுக்கல் : டி என் பி எல் கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பிடித்த ஒரு கேட்ச் ரசிகர்களால் அபாரமாக பாராட்டுகளை பெற்று வருகிறது.
36 வயதான தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஏன் சேர்க்கவில்லை என்பது தான் அனைவரும் கேள்வியாகவும் உள்ளது.
பலரும் இந்த முடிவுக்கு ரோகித் சர்மாவையும் ராகுல் டிராவிட்டையும் பொளந்து வருகிறார்கள். இந்த நிலையில் அஸ்வின் தன்னுடைய திறமையை டி என் பி எல் கிரிக்கெட் தொடரில் தினம் தினம் நிரூபித்து வருகிறார். அஸ்வினுக்கு வயதாகி விட்டதால் அவர் சரியாக பில்டிங் செய்ய மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.
அதற்கு பதிலடி தரும் விதமாக அஸ்வின் என்று ஒரு காரியத்தை செய்திருக்கிறார். திண்டுக்கல்லில் நடைபெற்ற சேப்பாக்கம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி களமிறங்கியது. இதில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களம் இறங்கியது.
அப்போது வெற்றிக்கு 41 பந்துகளில் 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சக்கரவர்த்தி வீசிய பந்தை சஞ்சய் யாதவ் அபரமாக தூக்கி அடித்தார். அப்போது பந்து வானில் உயர்ந்து சென்றது. அப்போது கவரில் நின்று கொண்டிருந்த அஸ்வின் பந்தை பிடிக்க பின்புறமாக ஓடி அதனை சரியாக கனித்து பாய்ந்து பந்தை பிடித்தார்.இதன் மூலம் சஞ்சய் யாதவ் ஆட்டம் இழந்தார். இது போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அஸ்வின் இந்த கேச்சை வீரர்கள் பலரும் பாராட்டினர்கள்.