இந்திய செய்திகள்

நான் மோடியின் ரசிகன்..அவரை ரொம்ப பிடிக்கும்.. மோடியை சந்தித்த பின் எலான் மஸ்க் நெகிழ்ச்சி

நியூயார்க்: நான் மோடியின் ரசிகன் என்றும் அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் எலான் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இன்றைய தினம் ஐநாவில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக நியூயார்க்கில் உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள எலான் மஸ்க், இந்தியாவின் எதிர்காலம் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக உள்ளேன். பிரதமர் மோடி இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்ய எங்களைத் தூண்டுவதால், இந்தியா மீது உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நான் மோடியின் ரசிகன். இது ஒரு அருமையான சந்திப்பு. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று உற்சாகமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button