
பலருக்கும் தெரியாத Low Data Mode.. சும்மா ON பண்ணா போதும்.. மொபைல் டேட்டாவை சூப்பரா சேமிக்கலாம்!
ஜியோ (Jio) முதல் பிஎஸ்என்எல் (BSNL) வரையிலாக அனைத்து டெலிகாம் நிறுவனங்களுமே தத்தம் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களின் வழியாக டெய்லி டேட்டா வரம்புகளை வழங்குவதால், ஒரு நாள் முழுவதுமாக மொபைல் டேட்டாவை (Mobile Data) வீணாக்காமல் பாதுகாப்பது அன்றாட வேலையாகி விட்டது.
அப்படி செய்தால் மட்டுமே ஒரு நாளின் முடிவில் – இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இரவு நேரங்களில் – மொபைல் டேட்டா தீர்ந்துபோகும் சிக்கலை நாம் எதிர்கொள்ளாமல் இருப்போம் மற்றும் கூடுதல் டேட்டா தேவைக்காக டேட்டா ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களுக்காக செலவு செய்யாமல் இருப்போம்.
ஒருவேளை, எவ்வளவு முயற்சித்தாலும் கூட விரைவாக தீர்ந்து போகும் மொபைல் டேட்டாவை உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் இருக்கவே இருக்கிறது – லோ டேட்டா மோட் (Low Data Mode) என்கிற சீக்ரெட் அம்சம். இப்படி ஒரு அம்சம் இருப்பது பெரும்பாலான ஐபோன் (iPhone) யூசர்களுக்கு தெரியவே தெரியாது!
ஒருவேளை நீங்களும் ஒரு ஐபோன் பயனர் தான், இருந்தாலும் கூட லோ டேட்டா மோட் பற்றி உங்களுக்கு யாருமே எதுவுமே சொல்லி கொடுக்கவில்லை என்றால்.. லோ டேட்டா மோட் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்யும்? இது எந்தெந்த ஐபோன்களில் அணுக கிடைக்கும்? இதை பயன்படுத்துவது எப்படி? போன்ற விவரங்கள் இதோ:
உங்கள் டிவைஸின் மொபைல் டேட்டா நுகர்வை குறைக்க உதவும் ஒரு அம்சமாகும். இது உங்கள் ஐபோனில் உள்ள ஆப்களின் நடத்தையை (App Behaviour) மேம்படுத்துவதன் மூலமும், பேக்கிரவுண்ட் டேட்டாவை வரம்பிடுவதன் (Limiting Background Data) மூலமும் டேட்டா நுகர்வை குறைக்கிறது.