
பிரியறதுக்கு மனசே இல்ல! நம்ம எல்லாருக்கும் பிடிச்ச காரை இனி பாக்க கூட முடியாதா! திடீர்னு இப்படி பண்ணீட்டாங்களே
இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இதற்கு கியா கார்னிவல் (Kia Carnival) மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்
பிரம்மாண்டமான தோற்றம், சொகுசான கேபின் மற்றும் பிரீமியமான வசதிகள் என கியா கார்னிவல் கார் அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவின்போதுதான், கியா கார்னிவல் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது
கியா கார்னிவல் காரில் பொருத்தப்பட்டிருந்தது, 2.2 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் (Diesel) இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,800 ஆர்பிஎம்மில் 197 பிஹெச்பி பவரையும், 1,500-2,750 ஆர்பிஎம்மில் 440 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது.
இது கியா கார்னிவல் காரின் ரசிகர்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கியா கார்னிவல் கார் தற்காலிகமாக மட்டுமே நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளது. கூடிய விரைவில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து விடும். அதுவும் முற்றிலும் புத்தம் புதிய அவதாரத்தில்! ஆம், 4வது தலைமுறை கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 4வது தலைமுறை கியா கார்னிவல் கார், வரும் 2024ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன