
மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை!
டெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடும் என்றும் புயல் எச்சரிக்கை மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது
மத்திய மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் மலைப்பகுதிகளில் , பரவலாக மிக பலத்த மழை பெய்யும். மற்ற இடங்களில், கனத்த மழை முதல் மிகப்பலத்த மழை பெய்யக்கூடும். அடுத்த 4-5 நாட்களுக்கு ஒடிசா, சத்தீஷ்கர் மாநிலங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானாவில் மிக பலத்த மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா படுகையில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் அளவு 86 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை உள்ளது. ஹிட்கால் அணையின் மொத்த கொள்ளளவில் 98 சதவீதம் நீர் நிரம்பியுள்ளதால், 28,656 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு. உத்தரகாண்டில் அதிதீவிர மழைப்பொழிவு காரணமாக, சட்லெஜ், ரவி, பியாஸ், கக்கர், யமுனா, பாகிரதி, அலகண்டா, கங்கை, ராம்கங்கா, சாரதா, சர்ஜூ, காக்ரா போன்ற நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும். பீகாரில் பல ஆறுகளில் தொடர்ந்து, இயல்புக்கும் அதிகமான அளவு வெள்ள நிலை நிலவுகிறது. இந்த நிலை 3-4 நாட்களுக்கு நீடிக்கும்