ரூ1 லட்சம் கோடி வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டம்- தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி: மத்திய வேளாண் அமைச்சகத்தின் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ17,000 கோடி நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
வேளாண் அமைச்சகத்தின் வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் என்கிற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதன் கீழ் ரூ. 1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டம் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை தொடங்கி வைத்தார். அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் குளிர் சாதன சேமிப்பு மையங்கள் போன்றவற்றை உருவாக்க இந்த வேளாண் நிதியம் உதவும்