
விளையாட்டு செய்திகள்
TNPL 2023 – 6 பந்தில் 12 ரன்கள் தேவை.. அடுத்தடுத்து நடந்த டிவிஸ்ட்.. திண்டுக்கல், சேப்பாக் த்ரில்லர்
திண்டுக்கல் : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிந்தது
இந்த சீஸனில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முந்தையப் போட்டியில் அடைந்த தோல்வியுடனும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினர்.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஓப்பனர்கள் ராகுல் (9 பந்துகள் 20 ரன்கள்) மற்றும் ஷிவம் சிங்(16 பந்துகள் 21 ரன்கள்) நல்ல தொடக்கம் கொடுத்தாலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் நெருக்கடியான பந்துவீச்சில் திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து தவித்தது.