
சென்னை: ஜூன் மாதமே பாதி வந்து விட்ட போதும், இன்னமும் கத்தரி வெயில் தனது உக்கிரத்தை குறைக்காமல் இருப்பதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில்.. வெயில்.. வெயில்.. என மே முடிந்து ஜூன் மாதம் பாதி கடந்து விட்ட போதும், இன்னமும் பகல் நேரத்தில் மக்களை வெளியில் தலைக் காட்ட முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறது கோடை. கத்தரி முடிந்த பிறகு கொஞ்சம் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் பரிசாகக் கிடைத்துள்ளது.
ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்தாலும், அடிக்கிற வெயிலுக்கு அது போதுமானதாக இல்லை. இதனால் எப்போது வெயில் காலம் முடியும் என மழை வேண்டி மக்கள் விரதம் இருக்க ஆரம்பித்து விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான வெயிலின் கொடுமைகள் பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…