
அதிகபட்சம் 1 மணி நேரம்தான்.. பல இடங்களில் சட்டென வடிந்த தண்ணீர்.. சென்னை வடிகால் அமைப்பின் மேஜிக்!
சென்னை: சென்னையில் இரவு முழுக்க மிக தீவிர கனமழை பெய்தும் கூட பல இடங்களில் தண்ணீர் வேகமாக வடிந்து உள்ளது.
சென்னையில் சாலை ஓரங்களில் வடிகால் அமைப்புகள் கடந்த 2022 வருடம் அமைக்கப்பட்டது. அதன்பின் 2022 இறு
இந்த கனமழையின் போது தண்ணீர் தேங்காமல் வேகமாக வடிந்தது. அப்போதே சில இடங்களில் த
மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் அதிக அளவில் சாலைகளில் ஓடும். ஆனால் முன்பெல்லாம் இதை மோட்டார் வைத்து நீக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது சாலைகளில் தேங்கும் தண்ணீர் வடிகால் வழியாக ஒரு மணி நேரத்தில் சென்றுவிடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படியே சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்களில் எல்லாம் வேகமாக தண்ணீர் வெளியேறி உள்ளது. வடபழனி, சைதாப்பேட்டை, நங்கநல்லூர், கிண்டி, ஆலந்தூர், மத்திய கைலாஷ், அடையாறு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் முன் வடிந்துள்ளது.
தி நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய ஒரு மணி நேரத்தில் வடிந்து உள்ளது. கத்திபாராவில் மட்டும் பாலத்திற்கு கீழ் இன்னும் தண்ணீர் வடியவில்லை. சென்னை வியாசர்பாடி ஜீவா சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.
வேகமாக வடிந்த மேஜிக்: தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. அதன்படி பொதுவாக மழை பெய்தால் 2 – 3 மணி நேரம் தண்ணீர் தேங்கும் சாலைகளில் உடனே மழை நீர் வடிந்துவிட்டது. தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலையை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் நினைத்ததை விட வேகமாக வடிந்துவிட்டது என்று மக்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும்.
நிறைவு பெறும் பணிகள்: சென்னையில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தற்போது பலன் அளிக்க தொடங்கி உள்ளது. பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நீர் தேங்க காரணம்; வடிகால் அமைக்கப்பட்டும் சில இடங்களில் நீர் தேங்க காரணங்கள் உள்ளன. கடந்த மழையின் போது இந்த திட்டம் இவ்வளவு சிறப்பாக பயன் அளித்தும் கூட இதை சிலர் தவறாக பயன்படுத்த முயன்று இருக்கின்றனர். அதாவது இந்த மழைநீர் குழாய்களில் கழிவு நீரை வெளியேற்ற முயன்று உள்ளனர்.
மழை நீர் குழாய்களில் நைசாக கழிவு நீர் செல்லும் குழாய்களை மாட்டி வீடு, அலுவலகங்களில் இருக்கும் கழிவு நீரை வெளியேற்றி உள்ளனர். ஒரு இடம், இரண்டு இடம் என்று இல்லை. மொத்தம் 1470 இடங்களில் இப்படி செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி இந்த கழிவு நீர் குழாய்களை அமைத்ததோடு மட்டுமின்றி அதை பராமரித்தும் வருகிறது. சைலண்ட்டாக குழாய்களில் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் 2 -3 முறை குழாய்களை சோதனை செய்தும் வருகிறது. குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மழை காலங்களில் அதில் தண்ணீர் செல்வது சிக்கல் ஆகும். அதனால் குழாயில் கழிவு நீர் கலக்கிறதா என்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில்தான் இங்கே கழிவு நீரை கலக்கும் குழாய்களை சிலர் இணைத்து உள்ளதால் அந்த பகுதிகளில் மட்டும் தண்ணீர் ஓடாமல் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.