அரசியல்இந்திய செய்திகள்மற்றவை

ஆம்புலன்ஸ் வாகனங்களை ஹைடெக்காக தரம் உயர்த்துங்க! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அவசரகால ஊர்திகளின் தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைகோ விடுத்துள்ள இந்த வேண்டுகோள் மிகவும் முக்கியமானதாகவும் காலத்தின் தேவைகருதி கேட்கப்பட்டுள்ள கோரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்பிடும் போது அரசு அவசரகால ஊர்திகளின் தரம் பல இடங்களில் குறைவாகவே உள்ளது.

இதனால் இதனை கவனத்தில் சமூக அக்கறையுடன் வைகோ இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

‘தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உயிர் காக்கும் நேரத்தை சாலையிலேயே கழிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இதைப் போக்குவதற்கு சாலை விதிகளை சீரமைத்து, ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக விரைவுப் பாதையை உருவாக்க வேண்டும்.”

”ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும் போது சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, போக்குவரத்தை சீர்செய்திட வேண்டும்.” ” கூடுதலாக ஆம்புலன்சிலிருந்து போக்குவரத்துக் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளும் வகையில், ஆம்புலன்சில் வயர்லஸ் கருவி பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.”

” கூடுதலாக ஆம்புலன்சிலிருந்து போக்குவரத்துக் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளும் வகையில், ஆம்புலன்சில் வயர்லஸ் கருவி பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button