
உங்கள் பிரிட்ஜ்ஜில் கூலிங் பிரச்சனை இருக்கிறதா? அப்போ இந்த 10 விஷயம் தான் காரணம்!
உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்கிறதா? உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் குறைந்துவிட்டதாக தோன்றுகிறதா? அப்படியானால், உங்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இந்த 10 தவறுகளை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தமாகும். பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 டிப்ஸ் இதோ.
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய எல்லா வீடுகளிலும் ஒரு பிரிட்ஜ் ஆவது இருக்க தான் செய்யும். பிரிட்ஜ் வாங்கிய புதிதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கும். ஆனால், வருடங்கள் நகர-நகர உங்களுடைய பிரிட்ஜ்ஜின் கூலிங் மெல்ல-மெல்ல குறைவது போல நீங்கள் உணர்வீர்கள். சிலர் இது நம்முடைய பிரம்மை என்று கருதிக்கொண்டு மனதை தேற்றிக்கொண்டாலும். சிலர் இதுபோன்ற சிறிய வேறுபாடுகளை நன்கு உணர்ந்திருப்பீர்கள்.
அப்படி, உங்கள் பிரிட்ஜ் இல் இத்தகைய வேறுபாடுகளை கண்டறிந்த கெட்டிக்காரர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. உங்கள் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ்ஜின் கூலிங் குறைந்துவிட்டதாக கருதினால், கட்டாயம் இந்த 10 தவறுகளில் எதோ ஒன்றை நீங்கள் செய்து வருகிறீர்கள் என்று அர்த்தமாகும். உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங்கை மீண்டும் அதிகரிக்க இந்த டிப்ஸை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
1. பிரிட்ஜ் இன் கதவில் இருக்கும் காஸ்கெட்டை கொஞ்சம் கவனியுங்கள். டோர் காஸ்கெட்டில் சிறிய வெடிப்புகள் அல்லது ஓட்டைகள் இருந்தால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் நிலையாக இருக்காது. இதனால் மின்சார சக்தியும் அதிகமாக பயன்படுத்தப்படும். 2. பிரிட்ஜ் டோர்களை சரியாக மூடவும். சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பிரிட்ஜ்ஜின் கதவை சரியாக மூடாமல் விட்டுவிடுவீர்கள். இப்படி செய்தால், உங்கள் பிரிட்ஜ் திறந்திருக்கும் நேரத்தில் குளிர்ச்சியை உருவாக்க அதிகமாக செயல்படும். இதனால் சில கோளாறுகளை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும்.
3. உங்கள் பிரிட்ஜ்ஜில் சரியான டெம்ப்பிரேச்சரை செட் செய்வது முக்கியம். பிரிட்ஜ் இன் டெம்ப்பிரேச்சர் 4°C ஆகவும், பிரீசர் டெம்ப்பிரேச்சர் 0°C அல்லது -18°C -க்குள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
4. பிரிட்ஜ்ஜில் அதிகமான பொருட்களை திணிக்க கூடாது. அதாவது பிரிட்ஜ்ஜின் இன்டிரியர் வென்ட்கள் எளிதாக கூலிங் காற்றை அனுப்பும் படி, பொருட்களை அடுக்க வேண்டும். இடைவெளியே இல்லாமல், அடைசல் போல பொருட்களை பிரிட்ஜ்ஜினுள் திணிக்க கூடாது.
5. பிரிட்ஜ்ஜில் வைக்கும் போர்டுகளை சரியாக பேக்கிங் உடன் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பாலிஸ்டிக் கண்டைனர் அல்லது மூடப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவது சிறப்பானது.
6. டிபிரோஸ்ட்டிங் செய்யும் பழக்கத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். உங்கள் பிரிட்ஜ்ஜின் பிரீஸரில் படியும் ஐஸ்களை உடனுக்குடன் நீக்கம் செய்வது முக்கியமானது. அதிகப்படியான ஐஸ் பிரீஸரில் இருந்தால் பிரிட்ஜ் சீக்கிரம் கூலிங் ஆகும் என்பது போலியான தகவலாகும். பிரீஸரில் படியும் ஐஸ் பிரிட்ஜ்ஜை வீணடிக்கும், மின்சார செலவை அதிகரிக்கும்.
7. உங்கள் பிரிட்ஜ் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி குறைந்தது 2 இன்ச் இடைவெளியாவது இருக்க வேண்டும். குறிப்பாக, சுவருக்கு அருகில் பிரிட்ஜ்ஜை வைக்கும் போது, இதை நோட் செய்வது மிகவும் முக்கியமானது.
8. உங்கள் பிரிட்ஜ்ஜை அடிக்கடி சுத்தம் செய்வது மிக முக்கியமானது. பிரிட்ஜ்ஜை சுத்தமாக வைக்காவிட்டால், நாளைடைவில் அழுக்குகள் பிரிட்ஜ்ஜின் வெண்ட்களை ஆங்காங்கே அடைத்துவிடும். இதனால் கூலிங் சிக்கல் எழக்கூடும்
9. பிரிட்ஜ்ஜின் கன்டென்சர் காயில்-களை சுத்தமாக வைப்பதும் முக்கியமானது. கன்டென்சர் காயிலில் தூசிகள் மற்றும் அழுக்குகள் பாடியதுவங்கினால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் வருடங்கள் நகர-நகர குறைவாக அதிக வாய்ப்புள்ளது.
10. பிரிட்ஜ் நேரான தரையில், எந்தவித ஏற்ற இரங்கங்கள் இல்லாமல் நிலையாய் அமைந்திருக்கிறதா என்பதை சோதனை செய்துகொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறையாவது பிரிட்ஜ் மெக்கானிக்கை வைத்து பிரிட்ஜ்ஜை முழுமையாக செக் அப் செய்வது சிறப்பானது. இந்த 10 விஷயங்களை பக்காவாக நீங்கள் பின்பற்றினால், உங்கள் பிரிட்ஜ்ஜின் கூலிங் குறையாது.