மற்றவைவிவசாய செய்திகள்

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் கவலை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உரத்துக்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. அதற்கான மானியத்தை உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. பல்லடம்: விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உரங்களைப் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். பின்னர் பசுமை புரட்சி வந்த பிறகு ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிகளவு ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் விவசாய நிலங்களில் மண் மலடாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக உரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உரத்துக்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. அதற்கான மானியத்தை உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை கம்பெனிகளே நிர்ணயிப்பது போல உரத்தின் விலையை கம்பெனிகளே முடிவு செய்கின்றன. இதையும் படியுங்கள்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் தொடக்கம் மத்திய அரசு குறிப்பிட்ட அளவு மானியத்தை மட்டும் உர ஆலைகளுக்கு வழங்குகிறது. இதனால் உரம் விலை, பெட்ரோல் விலை மாதிரி அடிக்கடி உயர்ந்து வருகிறது. அதனுடன் ஜி.எஸ்.டி., 5 சதவீதம் கூடியுள்ளது. தற்போது டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகமாகியுள்ளது.  இதனால் உர மூட்டைக்கு கம்பெனி நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு வியாபாரிகள் விற்க வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது பாக்டம்பாஸ் ஒரு மூட்டை 1,290 ரூபாயாக இருந்தது. இப்போது ரூ.1,490 ஆக உயர்ந்துள்ளது. டி.ஏ.பி.,உரம் 1,200 ரூபாயிலிருந்து, 1,950 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதையும் படியுங்கள்: மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா சல்பேட் ரூ.925 ஆக இருந்தது. மூட்டைக்கு ரூ. 200 அதிகரித்து 1,125 ரூபாயாக அதிகரித்துள்ளது. உரங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப விளைபொருட்களின் விலை உயர வில்லை. உரங்கள் விலை உயர்வு விவசாயிகளை மிகவும் பாதித்துள்ளது. ஏற்கனவே விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாதது, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தவித்து வரும் விவசாயிகள் உர விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதே நிலை நீடித்தால் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்குச் செல்லும் நிலை ஏற்படும். எனவே உரங்களின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button