
உலகில் யாரும் செய்திராத முயற்சி.. செஸ் கம்போசிஷன் தொடர்.. உலகக்கோப்பையை வென்றார் தமிழக வீரர்!
அமீரகம்: உலகக்கோப்பை செஸ் கம்போசிஷன் தொடரில் இந்திய வீரர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை செஸ் கம்போசிஷன் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜெய்ராவில் நடைபெற்றது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த தொடரில் இந்திய வீரர் வேல்முருகன் நல்லுசாமி முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றுள்ளார்.
செஸ் கம்போசிஷன் செஸ் கம்போசிஷன் என்பது வழக்கமான செஸ் போட்டியை போன்றது இல்லை. வழக்கமான போட்டியில் இருந்து இதன் ஆட்டமுறை முற்றிலும் மாறுபட்டிருக்கும். அதாவது ஒரு வீரர், செஸ் பலகையில் குறிப்பிட்ட சில இடங்களில் காய்களை வைத்து ( puzzle ) போன்று உருவாக்க வேண்டும். அதனை குறிப்பிட்ட மூவ்களுக்குள் சரிசெய்வதை போல உருவாக்கியிருக்க வேண்டும். இதில் எந்த கம்போசிஷன் சரியாக உள்ளதோ அதற்கு பரிசு வழங்கப்படும்.
விளையாட்டு முறை அதன்படி உலகில் இருந்து பல்வேறு வீரர்கள் தங்களது ஒரே ஒரு கம்போசிஷனை அனுப்பியிருந்தனர். அதில் இருந்து தமிழக வீரர் வேல்முருகன் நல்லுசாமி முதலிடத்தை பிடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட theme-ல் அவரின் கம்போசிஷன் இருந்ததால் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் உலக செஸ் ஃபெடரேஷன் இந்த போட்டியை நேரடியாக நடத்துவதால் அதன் தலைவர் அர்காடி வோர்கோவிச் சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.
பரிசு வழங்கும் விழா இந்நிலையில் அதற்கான கோப்பை தற்போது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அவருக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 25,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அரசுக்கு கோரிக்கை இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் செஸ் பிரபலமாகி வந்த போதும், செஸ் கம்போசிஷன் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என ஆதங்கப்பட்டார். மேலும் இந்த விளையாட்டின் மீது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதற்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.