
சென்னை: மழையால் குளிர்ந்து கிடக்கும் சென்னையை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
.
போன வாரம் காய்ந்து கிடந்த ஊரா இது என ஆச்சர்யப்படும் அளவிற்கு, அப்படியே கிளைமேட் மாறி குளுகுளுவெனக் கிடக்கிறது சென்னை. திடீர் என வந்து சர்ப்பிரைஸ் கொடுத்து வரும் மழை கூடவே குழந்தைகளுக்கு ஒருநாள் பள்ளி விடுமுறையையும் வாங்கிக் கொடுத்து விட்டது.
வெயிலாக இருந்தாலும் சரி, மழையாக இருந்தாலும் சரி.. எப்படியும் அலுவலகம் போகிறவர்கள் விடுமுறையை எதிர்பார்க்க முடியாது. அதனால் எப்படி மழையை ரசித்துக் கொண்டே வேலைக்குக் கிளம்பலாம் என மீம்ஸ் போட்டு ஐடியா கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.