
சென்னை: சமூகவலைதளங்களில் பள்ளி மாணவர்கள் பற்றிய மீம்ஸ்களோடு, கல்லூரி கால நினைவுகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
ஒவ்வொருவருக்கும் பள்ளி வாழ்க்கை எப்படியோ, அப்படித்தான் கல்லூரி வாழ்க்கையும். பள்ளிக்கால நண்பர்கள்கூட ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரிந்து போக வாய்ப்புள்ளது. ஆனால், கல்லூரி நண்பர்கள் பெரும்பாலும் கல்லூரிக்குப் பிறகும் நம்முடன் நட்பில் இருப்பார்கள். அந்தளவிற்கு கல்லூரிக்காலம் நட்பிற்கும் முக்கியமானது.
இப்படியான பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை, படித்து முடித்து வேலைக்குச் சென்றபிறகும் ஒவ்வொருவரும் அசை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். தற்போதும் அப்படித்தான் மீம்ஸ் போட்டு, ‘ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..’ என மனதிற்குள் பாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பள்ளி மற்றும் கல்லூரி பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக.