
எல்லாம் முடிஞ்சது.. சென்னையில் இனிமே என்ன நடக்கும்? மழை பெய்யுமா? வல்லுனரின் மெகா வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்? சென்னையில் மழை பெய்யுமா? என்பது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு புரட்டி எடுத்த மழை இன்று அதிகாலை குறைந்துள்ளது. தற்போது மழை இல்லாத லேசான வெயில் நிலவி வருகிறது.
நேற்று இரவு சென்னையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. சென்னையில் 10 நாட்களாக விடமால் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இந்த நிலையில் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்? சென்னையில் மழை பெய்யுமா? என்பது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் தீபகற்ப பகுதிகளில் நிலவிய நிலையற்ற காற்று தன்மை தற்போது சரியாகி உள்ளது.
இந்த நிலையற்ற மேலடுக்கு சுழற்சிதான் தமிழ்நாட்டில் மழை பெய்ய காரணமாக இருந்தது. கடந்த 2 நாட்களாக மழைக்கு காரணமாக இருந்த இந்த காற்று சரியாகி உள்ளதால் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேபோல் சென்னையிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.
லேசான மழை: சென்னையில் பெரும்பாலான தென் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து மழை இல்லாத லேசான வானிலை மட்டுமே நிலவி வருகிறது. சென்னையில் மழை விட்டாலும் இப்போதும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இப்போதும் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது. மழை அளவு: காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு புரட்டி எடுத்த மழை இன்று அதிகாலை குறைந்துள்ளது. தற்போது மழை இல்லாத லேசான வெயில் நிலவி வருகிறது.
சென்னையில் மழை விட்டாலும் இப்போதும்செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இப்போதும் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.