
எல்லாரையும் போட்டு அடிப்பாரு மாரி செல்வராஜ்.. உதயநிதி சொன்ன ஷாக் நியூஸ்.. ஆமாம் போட்ட வடிவேலு!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த மறைந்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் தன்னை செவுட்டுலயே மாரி செல்வராஜ் அடித்தார் என பேசிய பழைய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வந்த நிலையில், லேட்டஸ்ட்டாக மாமன்னன் படத்தின் ஷூட்டிங்கிலேயும் மாரி செல்வராஜ் எல்லாரையும் அடிப்பார் என உதயநிதி ஸ்டாலினே ஓபனாக சொல்லி உள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் முன்னிலையிலேயே தேவர்மகன் படம் தந்த வலியின் எதிர்வினை தான் பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் விரைவில் வெளியாக உள்ள மாமன்னன் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது.
சமூக வலைதளங்களில் மாரி செல்வராஜ் தான் சாதிய வெறியை தற்போது தூண்டுகிறார் என்றும் பழையவற்றை தேவையில்லாமல் கிளறி தனது படத்தின் ப்ரமோஷனுக்காக பாடுபட்டிருக்கிறார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
எல்லாரையும் அடிப்பியா: மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் வசனம் அப்படியே மாரி செல்வராஜுக்கே பொருந்துவது போல இருக்கிறதே என நெட்டிசன்கள் அவரை பங்கமாக வறுத்தெடுத்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் உன்னை விட எளியவர்களை எப்படி போட்டு அடிக்க முடிகிறது. எந்த அதிகாரத் திமிர் உன்னை அடிக்கத் தூண்டியது என மாரி செல்வராஜை பார்த்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உதயநிதியே சொல்லிட்டாரே: மறைந்த தெருக்கூத்து கலைஞர் தங்கராஜ், நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து உள்ளிட்ட பலர் மாரி செல்வராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டு மற்றவர்களை பயங்கரமாக அடிக்க சொல்வார் என்றும், அடிக்கும் காட்சிகளில் உண்மையான அடியின் சத்தத்தையே பதிவு செய்வார் என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், செட்ல எல்லாரையும் போட்டு மாரி செல்வராஜ் கண்டபடி அடிப்பாரு, கன்னா பின்னாவென திட்டுவாரு எனக் கூறியுள்ளார்.
அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கும் அடி: மாரி செல்வராஜை போலவே இயக்குநராகும் முயற்சியில் உதவி இயக்குநர்களாக அவரிடம் பணிபுரிபவர்களையும் கெட்ட வார்த்தையில் திட்டுவது, அடிப்பது என ஷூட்டிங் ஸ்பாட்டே போர்க்களமாக இருக்கும் என்றும் எப்போதும் டென்ஷனாகவே மனுஷன் இருப்பார் என்றும் உதயநிதி பேசியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதே தவறு என சொல்லப்படும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் எப்படி அனைவரையும் போட்டு அடிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதே தவறு என சொல்லப்படும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் எப்படி அனைவரையும் போட்டு அடிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஆமாம் போட்ட வடிவேலு: பகத் ஃபாசிலும் வடிவேலுவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக பேசும் போது இன்னைக்கு எடுத்தது நல்லா இல்லை. நாளைக்கு மறுக்கா ஒன்னு எடுப்போம் என ஃபகத் சொல்வார் என்று பேசிய வடிவேலு, உதயநிதி மாரி செல்வராஜ் செட்டில் அனைவரையும் போட்டு அடிப்பார் என சொல்லும் போது அவரும் சாட்சிக்கு ஆமாம் என அதிரடியாக கூறியது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மாரி செல்வராஜை திட்டும் ரசிகர்கள்: மற்றவர்களை விமர்சிக்கும் முன்பாக நாம முதலில் ஒழுங்கா இருக்கிறோமா என்பதை உணர வேண்டும். அதுவே தெரியாமல் மாரி செல்வராஜ் எப்படி கமல்ஹாசனையும் அவரது தேவர் மகன் படத்தையும் விமர்சிக்கலாம் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.