
சென்னை: சமூகவலைதளங்களில் எப்போதுமே கணவன்மார்கள், மனைவியை நினைத்து புலம்பும் மீம்ஸ்களுக்கு மவுசு அதிகம். இப்போதும் அப்படித்தான் பார்த்ததும் சிரிக்க வைக்கும்படி சில மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
டிவியில் போடுவதற்குப் புதுப்படம் இல்லையென்றால், எல்லோரும் ரசிக்கும்படி எப்போதும் ரெடிமேடாக ஒரு படத்தை வைத்திருப்பார்கள் (உதாரணத்திற்கு விஜய் டிவியில் கும்கி, பாகுபலி மாதிரி..). நாமும் எத்தனை முறைப் போட்டாலும் சளைக்காமல் அந்தப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்போம்.
சமூகவலைதளங்களிலும் அதுபோல் கான்செப்ட்டே இல்லாமல் டிரையாக இருக்கிறது என்றால், உடனடியாக 90ஸ் கிட்ஸ் அல்லது கணவன், மனைவி பற்றிய நகைச்சுவை மீம்ஸ்களைக் களமிறக்கி விடுவார்கள் நெட்டிசன்கள். அவையும் உடனே அதிகம் பகிரபட்டு விடும்.
இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளங்களில் கணவன்மார்கள் மனைவியை நினைத்து புலம்பும் மாதிரியான சில மீம்ஸ்கள் நம் கண்ணில் பட்டது. அவற்றில் பார்த்தும் சிரிப்பை வரவழைக்கக் கூடியதும், நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்க வைப்பது மாதிரியான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக…