
சென்னை: ‘கிச்சானாலே இளிச்சவாயன் தானே..’ என்பது போல், 90ஸ் கிட்ஸ்களில் திருமணமாகாதவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது நெட்டிசன்களுக்கு பெரும்பாலும் பிடித்தமான பொழுதுபோக்குதான்.
குழந்தை மனசு கொண்டவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் என்பதாலேயே எப்போதும் இணையத்தில் மீம்ஸ்களின் பிரபலமான கண்டெண்ட்களாக இருப்பவர்கள் 90ஸ் கிட்ஸ்கள் தான். அதிலும் அவர்களைவிட குறைந்த வயதுடையவர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட, இன்னமும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல், தங்களது குழந்தை மனதுடனேயே வளைய வருவதாக மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது என்றால், மீமர்களுக்கு அது கை வந்த கலை.
இப்போதும் அப்படித்தான் 2கே கிட்ஸ்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு விட்டார்களே, நமக்கு அப்படி ஒரு திருநாள் வரவில்லையே என 90ஸ் கிட்ஸ்கள் ஏங்குவதாக நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…