
செருப்பு வாங்க காசு இல்லாமல் இருந்தவர்! இன்று 7000 கோடிக்கு சொந்தகாரர்..!
இந்தியாவில் புதுமைக்கு எப்போதும் மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு இருக்கும், அந்த வகையில் மருத்துவ துறையில் முக்கியமான மாற்றங்களையும் புதிய வர்த்தகத்தையும் கொண்டு வந்தவர் கோயம்புத்தூரில் பிறந்தவர் வேலுமணி. யார் இவர்..? இவர் எப்படி 7000 கோடி ரூபாய் சம்பாதித்தார்..?
சமீபத்தில் வேலுமணி செய்த டிவீட் பலராலும் கவனிக்கப்பட்டது. நீங்கள் எவ்வளவு காஸ்ட்லியான கார் வைத்திருந்தாலும் மும்மையில் பயண நேரத்தை மிச்சப்படுத்த லோக்கல் டிரெய்ன் தான் பெஸ்ட். காரில் 70 நிமிடம், ரயிலில் 18 நிமிடம் என டிவீட் செய்து தான் ரயிலில் சென்ற போட்டோ-வை பகிர்ந்தார்.
கோயம்புத்தூர் அருகே உள்ள அப்பஅடுத்த 3 வருடத்தில் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையில் இருக்கும் பிரபலமான பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) லேப் அசிஸ்டென்ட் ஆக பணியாற்ற துவங்கினர். BARC-யில் சுமார் 14 வருடம் பணியாற்றின், இங்கு பணியாற்றிக்கொண்டு இருக்கும் போதே 1985 இல் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் 1995 இல் தைராய்டு பயோகெமிஸ்ட்ரி பிரிவில் மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் வேலுமணி laboratory assistant பதவியில் இருந்து scientist பதவிக்கு உயர்ந்தார்.
நாயக்கன்பட்டி புதூர் கிராமத்தில் ஒரு விவசாயி மகனாக ஏப்ரல் 1959ல் பிறந்தவர் வேலுமணி. தனது தந்தையிடம் சொந்தமாக விவசாய நிலம் இல்லாத காரணத்தால் விவசாய பணிகளை செய்தும், பால் விற்பனை செய்தும் பிள்ளைகளை வளர்த்தார்.
வேலுமணி, பாப்பநாயக்கன்பட்டி புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். 1978 இல் 19 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் பி.எஸ்சி பட்டம் பெற்றார். படிப்பை முடித்த உடன் கோயம்புத்தூரில் இருக்கும் ஜெமினி கேப்சியூல் என்னும் சிறிய பார்மா நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.