
டென்னிஸ் -கடைசி போட்டியில் விளையாடிய சானியா மிர்சா.. “கனவை விட்றாதீங்க” பெண் பிள்ளைகளுக்கு அறிவுரை
துபாய் : மகளிர் டென்னிசில் இந்தியாவின் ஸ்டார் ஆக விளங்கிய சானியா மிர்சா, தனது கடைசி சர்வதேச ஆட்டத்தில் இன்று விளையாடினார். துபாயில் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை மெடிசன் கியுடன் சானியா மிர்சா ஜோடி சேர்ந்தார்.
ரஷ்ய ஜோடியான வெரோனிக்கா சாம்சன்நோவா ஆகியோரை சானியா மிர்சா, மெடிசன் கி ஜோடி எதிர்கொண்டது. தனது கடைசி தொடர் என்பதால் சானியா மிர்சா மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
எனினும் இந்த போட்டியில் 4-6,0-6 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா ஜோடி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.
சானியமா மிர்சாவின் சாதனை இதன் மூலம் தனது கடைசி டென்னிஸ் போட்டியில் விளையாடி ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடை சானியா மிர்சா பெற்றார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் மகளிர் டென்னிசின் அடையாளமாக சானியா மிர்சா விளங்கினார். மகளிர் ஒற்றைப் பிரிவு தரவரிசையில் 27 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த சானியா மிர்சா கிராம்ஸ்லாம் தொடரில் ஒற்றைப் பிரிவில் இரண்டாவது வாரம் வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
6 கிராண்ட் ஸ்லாம் எனினும் சானியா மிர்சாவால் ஒற்றையர் பிரிவில் காயம் காரணமாக பெரிதளவில் சாதிக்க முடியவில்லை. எனினும் தன்னுடைய வைராக்கியத்தை இழக்காத சானியா மிர்சா இரட்டையர் பிரிவுக்கு மாறி ஜொலிக்கத் தொடங்கினார். ஆறு மகளிர் இரட்டையர் பிரிவு கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்த சானியா மிர்சா தொடர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவில் 91 வாரம் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார். தனது போட்டி தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சானியா பெண் பிள்ளைகளுக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அறிவுரை அதில் நீங்கள் பெண் குழந்தைகளாக பல்வேறு அழுத்தத்தை சமூகம் மூலம் நீங்கள் எதிர்கொள்வீர்கள். என் விஷயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். ஆனால் இந்த சமூகத்தை நான் தனியாகத்தான் எதிர்கொண்டேன். நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று இந்த சமூகத்திற்கு நாம் புரிய வைக்க வேண்டும். இளம் பெண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
அனுமதிக்காதீர்கள் நீங்கள் நினைப்பதை செய்யக்கூடாது என்று யாரும் உங்களை தடுக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?என்ன செய்யக்கூடாது ? என்று மற்றவர்கள் உங்களுக்காக முடிவெடுக்க கூடாது. இந்த சமூகம் பெண் குழந்தைகளை அப்படித்தான் செய்யும். நீங்கள் தான் உங்களை நம்பி போராட வேண்டும். வாழ்க்கையில் நிச்சயம் நெருக்கடிகளும் அழுத்தங்களும் இருக்கத்தான் செய்யும். அதனை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் நீங்கள் வெற்றி அடைவீர்களா என்பது தெரியும். நீங்கள் சாம்பியன் ஆவதும் சராசரி வீரர் ஆவதும் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்து அல்ல.
மிகப் பெரிய பிரச்சினை உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அது அமையும். இந்திய டென்னிசில் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. பல நாடுகள் டென்னிஸுக்கு லட்சம் கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் நாம் ஏதேனும் தொடர்வென்றால் மட்டுமே நம்மிடம் வந்து போட்டோ எடுத்து ரசிகர்கள் சென்றுவிடுவார்கள். இப்படி இருந்தால் எப்படி நம் நமது நாட்டில் சாம்பியன்ஸ் உருவாகுவார்கள். டென்னிஸில் சாதித்த இந்திய வீரர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள்.
சிஸ்டம் சரியில்லை இங்கு இருக்கும் சிஸ்டத்தால் நாங்கள் வெற்றி பெறவில்லை. இந்த சிஸ்டத்தையும் மீறி தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். உண்மையை சொல்லப் போனால் டென்னிசுக்காக இங்கு எந்த சிஸ்டமும் இல்லை என்று கூறியுள்ள சானியா மிர்சா தற்போது இளம் வீராங்கனைகளுக்கு உதவுவதற்காக பயிற்சி அகாடமியை தொடங்கி நடத்த உள்ளதாக கூறினார். சானியா மிர்சா தற்போது மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்கு மென்டராக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.