
தஞ்சாவூரே வியந்துடுச்சே.. ஊர்மெச்சிய “மாப்ளை”.. ஆமா, அதென்ன பின்னாலயே வருது.. துள்ளிகுதித்த ஒரத்தநாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், இணையத்தில் 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது.. அப்படி என்ன வித்தியாசம் ஒத்தநாடு பகுதியில் நடந்துள்ளது?

திருமண பரிசுகள் என்றாலே யாராலும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.. புதுமண தம்பதிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் பொக்கிஷமாக இருக்கும் ஒரு தோற்றத்தை உருவாக்குதே இத்தகைய சிறந்த திருமண பரிசுகள்தான்.அதேபோல, குடும்பத்தில் சீர்வரிசை என்றால், கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை தம்பதிகளுக்கு சீர் வரிசைகளாக தருவார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள் அமர்க்களம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையிலலை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்.. மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர்
நிச்சயதார்த்தம்: தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான நிச்சயதார்த்த விழாவை பெரியவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்துக்கு சுற்றம்முற்றம் உட்பட அக்கம்பக்கம் பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்தனர். நிச்சயாதார்த்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் அருமுளை கிராமத்தில் இருந்து, மொத்தம் 15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் அமர்க்களமாக கிளம்பி வந்தார்கள்.. அப்போது வாணவேடிக்கை சத்தம், சுற்றுவட்டார பகுதிகளில் எதிரொலித்து கொண்டேயிருந்தது.. பிரம்மாண்டம்: மாப்பிள்ளையின் சொந்த ஊரான அருமுளையில் இருந்து தாம்பூல தட்டுகளில் பல்வேறு வகையான மலர்கள், பழங்கள், பலகார வகைகள் என சுமார் 500 சீர்வரிசைகள் நிரம்பியிருந்தன.. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாண வேடிக்கை, பட்டாசுகள் சத்தம் முழங்கி கொண்டேயிருந்திருக்கிறது.. நீண்ட வரிசையில் இந்த சீர்வரிசை ஊர்வலம் சென்றிருக்கிறது..
வரிசைகள்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.. கடந்த மாதம் நரிக்குடியில் ஒரு திருமணம் நடந்தது.. மாப்பிள்ளை சிவாவுக்கு சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் நிறைய ஆர்வமாம்.