அரசியல்இந்திய செய்திகள்மற்றவை

தட்டி தூக்கிய குமார்! மாஸ் வேகத்தில் செயல்படும் ஸ்டாலின்! சென்னைக்கு வரும் ராட்சச டபுள் டக்கர் பாலம்

சென்னை: மதுரவாயல் – துறைமுகம் பாலம் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான கட்டுமானம் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. டெண்டர் பணிகளும் விரைவாக முடிந்துள்ளன.

மதுரவாயல் – துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம். மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஓட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.

போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2010ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திடமாக இது இருந்தது.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்: ஆனால் அதன்பின் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். தமிழ்நாட்டில் அப்போது அரசியல் ரீதியாக கடுமையாக ஈகோ மோதல் நிலவி வந்தது. முக்கியமாக புதிய சட்டசபை கூட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது , கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே நின்றன. அந்த திட்டம் அதன்பின் மேம்படுத்தப்படாமலே இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது.

இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தானது: சென்னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில், J Kumar Infraprojects என்ற நிறுவனம் வென்றுள்ளது. ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகியவற்றை கைப்பற்றிய இந்த நிறுவனம் தற்போது டெண்டர் 4ஐயம் கைப்பற்றி உள்ளது. இதனால் விரைவில் அந்த நிறுவனம் பணிகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 9.7கிமீ இரண்டாம் கட்ட சாலைக்கான கட்டுமானத்திற்கான டெண்டர்களை இந்த நிறுவனம் வென்றுள்ளது. 910 நாள் கட்டுமான காலக்கெடு அவர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமான மதிப்பீடு ரூ. 1208.94 என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது,.

இங்கே பணிகளை தொடங்க ரயில்வே, சுற்றுசூழல் துறை, கடல் ஒழுங்குமுறை துறை ஆகியவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதல் எல்லாம் அளிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இதன் பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது . பால்டம் எப்படி இருக்கும்: இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பாலம் நீளம்: இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிளி மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே. அதேபோல்தான். ஆனால் இதில் இரண்டு மேம்பாலங்களும் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும். சர்வதேச நாடுகள் பலவற்றில் இது போன்ற பாலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற இரட்டை பாலங்கள் பயன்படுத்தப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button