
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக இந்த வாரமும் சிக்கன், மட்டன் என விதவிதமான அசைவ உணவு மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கிறது இணையம்.
ஞாயிற்றுக்கிழமை என்றால் வீட்டில் அசைவம் சமைக்கிறார்களோ இல்லையோ, சமூகவலைதளங்களில் சிக்கன், மட்டன், பிரியாணி என விதவிதமாய் மீம்ஸ்கள் போட்டால்தான் நிம்மதியாக இருக்கும் நமது நெட்டிசன்களுக்கு. நன்றாக அசைவ விருந்து சமைத்து சாப்பிட்டவர்கள் ஒருபுறம் கெத்து காட்டுகிறார்கள் என்றால், மற்றொரு கறி விருந்து கிடைக்காமல் சாம்பாரும், ரசமும் சாப்பிட்டவர்கள் தங்களது மனவேதனையை மீம்ஸ் போட்டு புலம்புகின்றனர்.
இந்த இரண்டு ரகங்களுக்குள்ளும் வராமல், அதற்குள் ஞாயிறு முடிந்து விடுகிறதே என வேலைக்கு செல்பவர்களின் புலம்பல் தனி ரகம். இப்படியாக ஞாயிறு வந்து விட்டாலே விதவிதமான மீம்ஸ்களால் மணமணக்கிறது சமூகவலைதளப் பக்கங்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக…