
நொந்து போன சுந்தர்.. கேப்புல கிடா வெட்டிய Microsoft.. சைலன்ட்-ஆ அறிமுகமான ஓர்க்கா.. இது என்னென்ன செய்யும்?
சாட்ஜிபிடி (ChatGPT) என்கிற ஏஐ டூலை உருவாக்கிய ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமும், அதற்கு நிதியுதவி செய்த மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனமும் “மீண்டும்” கூட்டு சேர்ந்து சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனத்தின் தலையில் புதிய இடி ஒன்றை இறக்கி உள்ளன.
ஓப்பன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய இரண்டும் எண்ணற்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஏஐ திறன்களை கொண்டு வருவதற்கான வேலைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அதனொரு பகுதியாக இவ்விரு நிறுவனங்களும் சேர்ந்து, ஓர்க்கா (Orca) என்கிற புதிய ஏஐ லேங்குவேஜ் மாடலை (AI language model) உருவாக்கி உள்ளன.
ஆராய்ச்சி கட்டுரையின்படி, ஓர்க்கா என்கிற புதிய ஏஐ மாடலானது ஜிபிடி-4 போன்ற பெரிய அடித்தள மாதிரிகளின் (Foundation models) பகுத்தறிவு செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் சிறிய மாடல்களின் லூப்ஹோல்களை (குறைகளை) சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜிபிடி-4 போன்ற பெரிய லேங்குவேஜ் மாடல்களை பயன்படுத்தி ஆர்காவிற்கு பயிற்சியளிக்கலாம்ஓர்க்கா ஏஐ டூலால் என்னென்ன செய்ய முடியும்? இதுவொரு சிறிய லேங்குவேஜ் மாடல் ஆகும். ஆகியயால் இதனால் சில குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்ய முடியும். மேலும் இது செயல்படுவதற்கு குறைவான கணினி வளங்களே (Computing resources) தேவைப்படும். இருப்பினும் வரும் நாட்களில் ஜிபிடி-4 மாடலை பின்பற்றுவதன் வழியாக இது நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும். அதாவது ஜிபிடி-4 உதவியுடன் படிப்படியான சிந்தனை செயல்முறைகள், விளக்கங்கள் மற்றும் பலவிதமான சிக்கலான வழிமுறைகளை ஓர்க்கா கற்றுக்கொள்ளும். சில கூற்றுகளின்படி, ஏகிவலில் (AGIEval) உள்ள வழக்கமான ஏஐ மாடல்களை விட ஓர்க்கா 42 சதவீதம் வேகமானது!