அரசியல்இந்திய செய்திகள்மற்றவை

பாஜக குழிவெட்டுவது திமுகவிற்கு அல்ல.. அதிமுகவுக்கு.. புரிஞ்சுக்காம இருக்காங்க.. பற்ற வைக்கும் திருமா

சென்னை: இன்றைக்கு பாஜக குழி வெட்டுவது திமுகவுக்கு அல்ல.. அதிமுகவிற்குதான். அதிமுக அலார்ட் ஆகி விழித்துக் கொண்டால் அவர்கள் கட்சியை இன்னும் கொஞ்ச காலம் நடத்தலாம். அப்படி இல்லை என்றால் அதிமுவை தமிழ்நாட்டில் இல்லை என்ற சூழலை பாஜக உருவாக்கி விடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜகவின் முதல் கட்ட அரசியல் அதிமுகவை ஓரங்கட்டுவதுதான்.. திமுகவை எதிர்ப்பது இல்லை. நாங்கள்தான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். அதிமுகவை ஒன்னும் இல்லாமல் ஆக்குவதுதான் அவர்கள் முயற்சி. அந்த வேலையைத்தான் பாஜக செய்கிறது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், ஓபிஎஸ்க்கு தெரியவில்லை.

இன்றைக்கு பாஜக குழி வெட்டுவது திமுகவுக்கு அல்ல.. அதிமுகவிற்குதான். அதிமுக அலார்ட் ஆகி விழித்துக் கொண்டால் அவர்கள் கட்சியை இன்னும் கொஞ்ச காலம் நடத்தலாம். அப்படி இல்லை என்றால் அதிமுவை தமிழ்நாட்டில் இல்லை என்ற சூழலை பாஜக உருவாக்கி விடும். அதை முதலில் அதிமுக புரிந்து கொள்ள வேண்டும். பாஜக ஒன்னுமே இல்லை. பாஜகவை ஊடகங்கள் தான் பெரிது படுத்தி காட்டுகின்றன. தமிழ்நாட்டிற்குள் பாஜகவிற்கு ஒன்னுமே இல்லை.

“BJPன் தற்குறித்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது”- அமுதரசன், திமுக தினம் தோறும் அண்ணமாலை பற்றி எதாவது செய்தி போடுகிறார்கள்.. அண்ணாமலை சம்பந்தமே இல்லாமல் குதர்க்கமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலையும் பாஜகவும் வெறும் மீடியா ஹைப் தான். பாஜக என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் கிடையாது. இருக்கிறது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துவது ஊடகங்கள்தான். ஒரு மாநிலமே பற்றி எரிகிறது. ஆனால் யோகா பண்ணுங்கள் என மோடி பேசி வருகிறார். மோடி மணிப்பூர் போய் பார்க்க வேண்டாமா?

இல்லையென்றால் அந்த அரசை டிஸ்மிஸ் செய்யுங்க.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்கிறார்கள். இங்கு என்ன சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளது. இந்த ஆட்சியை கலைக்க சொல்வதற்கு என்ன முகாந்திரம் உள்ளது. ஆனால் மணிப்பூரில் ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதற்கு எல்லா முகாந்திரமும் உள்ளது. அவ்வளவு மோசமாக இரு சமூகங்கள் இடையே பிளவை உண்டாக்கி மோதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அமித்ஷா என்ன செய்கிறார்.. பிரதமர் மோடி என்ன செய்கிறார்.. அங்கு ஒரு அமைதியான சூழலை கொண்டு வரவேண்டுமா இல்லையா.. ஏனெனில் இதுதான் நடக்கும் என அவர்கள் விரும்புகிறார்கள்.. தமிழ்நாட்டிலும் இதை எதிர்பார்க்கிறார்கள். அவ்வளவு ஆபத்தான சக்திகளின் கையில் டெல்லி ஆட்சி உள்ளது. மநில அரசை பலவீனப்படுத்தி, மாநில அரசே இல்லை என்று கொண்டுவருவதுதான் பாஜகவின் செயல் திட்டங்களில் ஒன்று.
அவர்களுக்கு மொழி அடிப்படையில் மக்கள் மாநிலங்கள் பிரிந்து இருப்பதில் உடன்பாடு கிடையாது. மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுப்பதிலும் உடன்பாடு கிடையாது. ஒரே நாடு ஒரே கலசாரம், ஒரு கட்சி , ஒரு ஆட்சி என்பதுதான் பாஜகவின் கான்செப்ட் ஆக உள்ளது. ஒரு கட்சிதான் இந்த நாட்டை ஆளவேண்டும். அந்த அடிப்படையில் தான் இதை மெல்ல மெல்ல நீர்த்து போக செய்கிறார்கள். இதை ஜனநாயக சகதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button