
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – காலிறுதியில் தோற்ற உடன் கைக்கொடுக்காத உக்ரைன் வீராங்கனை.. காரணம் என்ன?
பாரீஸ் : 2023ஆம் ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த ஒரு வாரமாக பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், விறுவிறுப்பான காலிறுதி ஆட்டம் இன்று தொடங்கியது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2வது நிலை வீராங்கனையான சாபலெங்கா, உக்ரைன் வீராங்கனை எலினாவை எதிர்கொண்டார். இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல், சாபலெங்கா இருக்கிறார். இதனால், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சாபலங்காவின் கையே ஓங்கி இருந்தது.
எந்த இடம்? விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6க்கு4, 6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் சாபலெங்கா வென்றார். இதன் மூலம் அரையிறுதி சுற்றில் செக் குடியரசு வீராங்கனை முச்சோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த உடன் கிரிக்கெட்டை போலவே, வீராங்கனைகள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து செல்வது வழக்கம். ஆனால், சாபலெங்கா ஆட்டம் முடிந்த உடன் கைக் கொடுப்பதற்காக சென்றார். ஆனால், அவரை மதிக்காமல் உக்ரைன் வீராங்கனை எலினா சென்றார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள், எலினாவுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தனர். உக்ரைன், போரில், பெலாரஸ் நாடு, ரஷ்யாவுக்கு உதவி செய்கிறது. இதன் காரணமாகவே, உக்ரைன் வீராங்கனை எலினா இப்படி நடந்து கொள்கிறார். ஏற்கனவே இந்த தொடரில் ரஷ்ய வீராங்கனைக்கு எலினா கை கொடுக்காமல் சென்றார்.