அரசியல்இந்திய செய்திகள்மற்றவை

மணிப்பூரில் கலையப்போகும் பாஜக ஆட்சி? ஏப்ரல் 24ல் அனைத்து கட்சி கூட்டம்.. அமித்ஷா முக்கிய முடிவு!

டெல்லி: மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் பதற்றம் நீடிக்கிறது. மணிப்பூரில் பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ள நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கு மணிப்பூரும் விதிவிலக்கல்ல. இந்த மாநிலத்திலும் பழங்குடி மக்கள் அதிகமாக உள்ளனர். இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார்.

கடந்த 2017 முதல் 2022 வரை பாஜக ஆட்சி நடந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தான் புதிய ஆட்சி அமைந்த ஓராண்டு முடிவடைந்த நிலையில் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்தது

மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களுக்கு இடையேயான மோதல் வன்முறையாக மாறியது. இதில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதேபோல் தங்களையும் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க மைத்தேயி குழுவினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை தான் வன்முறையாக மாறி தீவைப்பு சம்பவங்களுடன் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 120 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பல அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முடிவுகள் அனைத்தும் பலன் கொடுக்கவில்லை. ஒரு தாயாக வலிக்கிறது.. மணிப்பூர் வன்முறையால் மனம்நொந்த சோனியா காந்தி.. வீடியோவில் உருக்கம்! இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில்கூறியுள்ளதாவது: ‛‛மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமைில் அனைத்து கட்சி கூட்டம் ஜூன் 24ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது” என கூறப்பட்டுள்ளது தொடர் வன்முறையின் காரணமாக மணிப்பூரில் முதல்வர் பீரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் தான் இந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு என்பது அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா நேற்று அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தான் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அமித்ஷாவை போல் வன்முறை நிகழ்ந்த மணிப்பூருக்கும் இவர் சென்று நிலைமை நேரில் பார்த்ததோடு, முதல்வர் பீரன் சிங் மற்றும் பிற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனால் தற்போதைய அனைத்து கட்சி கூட்டம் என்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த கூட்டத்தில் தான் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது. அந்த முடிவு தான் மணிப்பூரில் பாஜக ஆட்சி தொடருமா? இல்லை நீடிக்குமா? என்பதை நிர்ணயம் செய்ய உள்ளது. இதனால் அனைவரின் கவனமும் இந்த கூட்டத்தின் மீது திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button