தொழில்நுட்ப செய்திகள்

மாயமான நீர்மூழ்கி கப்பல்: சிக்னல் கிடைத்ததா? சமீபத்தில் வெளியான முக்கியத் தகவல் இதுதான்.!

மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியின் போது கடலின் அடி ஆழத்தில் இருந்து ஒலி சத்தங்கள் சிக்னல்களாக கிடைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தேடுதல் பணியில் சோனார் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த நீர்மூழ்கி கப்பல் சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்

கடந்த 1912-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரின் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி டைட்டானிக் என்று சொகுசு கப்பல் புறப்பட்டது. குறிப்பாக இதில் 2 ஆயிரத்து 224 பேர் பயணம் செய்தனர். ஆனால் வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது ராட்சத பனிப்பாறையில் மோதி இந்த கப்பல் 2 ஆக உடைந்து கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் கடலில் மூழ்கி ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கடந்த 1985-ம் ஆண்டு இந்த டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது முதல் ஆராய்ச்சியாளர்கள் நீர்மூழ்கி கப்பல்களில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கிடக்கும் பகுதிக்குச் சென்று பல ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் இந்த விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் 1997-ல் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது சுற்றுலாப் பயணிகளும் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைப் பார்க்க சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.

அதன்படி ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் அமெரிக்காவின் ஓசன்கேட் என்ற நிறுவனம் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. 8 நாள் பயணமான இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 2லட்சம் 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2 கோடி) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் இங்கிலாந்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் உள்பட 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைப் பார்க்க அழைத்து செல்லப்பட்டனர். இந்த ஓசன்கேட் டைட்டன் கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்பு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த நீர்மூழ்கி கப்பலை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button