
மோடி – ஜோ பைடன்.. மாறி மாறி கொடுத்துக்கொண்ட கிப்ட்.. செம..!
பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் சென்றுள்ளார், இந்த பயணத்தில் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவியை வெள்ளி மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜோ பைடன் மற்றும் ஜில் பைடனுக்கு தனித்தனியாக கிப்ட் கொடுத்தார் மோடி.
மோடி ஜோ பைடன்-க்கு சந்தனப் பெட்டியில் வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி விளக்கு மற்றும் 80 வயதானதை உணர்த்தும் வகையில் 1000 பௌர்ணமி கண்டவர்களுக்கு அளிக்கப்படும் ‘தாஸ் தானம்’ ஆகியவற்றை அடங்கிய பெட்டியை பரிசாக கொடுத்தார்
இது மட்டும் அல்லாமல் 10 முக்கிய உபநிடதங்கள் குறித்த The Ten Principal Upanishads புத்தகத்தின் முதல் பதிப்பின் பிரதியை ஜோ பிடனுக்கு பிரதமர் பரிசாக வழங்கினார்.
இதேபோல் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் வின்டேஜ் கேமரா, அமெரிக்கன் வைல்ட்லைப் போட்டோகிராபி புத்தகத்தையும், ராப்ர்ட் பார்ஸ்ட்-ன் கவிதைகள் அடங்கிய முதல் பதிப்பு புத்தகத்தில் அவருடைய கையெழுத்துடன் பரிசாக வழங்கினார். நியூயார்க்-ல் பயணத்தில் பல நிறுவனங்களின் சிஇஓ-க்கள், தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரை செவ்வாய்க்கிழமை சந்தித்த நிலையில், நேற்று யோகாவில் உலகளாவிய சாதனை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்பு வாஷிங்டன் புரப்பட்டார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் சென்றுள்ளதால், இப்பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. மோடியின் அரசு பயணம் என்பதால் அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் வெள்ளை மாளிகைக்கு முறையாக அழைத்து வியாழக்கிழமை இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக வெள்ளி மாளிகையில் மயில், தாமரை என பல சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது