
விஜய் சைலென்டாக செய்யும் சைட் பிஸ்னஸ்..
தளபதி விஜய் என செல்லமாக அழைக்கப்படும் ஜோசப் விஜய்-யின் 49வது பிறந்த நாள் இன்று, லோகேஷ்-ன் லியோ படம் சுட சுட தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில் விஜய்யின் அடுத்த படத்திற்கு பணிகள் தயாராகி வருகிறது
விஜய்-யின் சொத்து மதிப்பு 420 முதல் 450 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் விஜய் ஒரு படத்திற்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக வாங்குகிறார், சன் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்கு 100 கோடி ரூபாய் வாங்கியுள்ளார் விஜய், கடைசியாக வெளியான வாரிசு படத்திற்கு 120 முதல் 150 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்க கூடும் என பேசப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தனது தாய் ஷோபா பெயரிலும், மகன் சஞ்சய் பெயரிலும், மனைவி சங்கீதா பெயரிலும் 3 திருமண மண்டம் வைத்து நடத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் பிற நடிகர்களை போல் பெரிய அளவிலான வர்த்தகத்தை கொண்டிருக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க வருமானத்தை இந்த 3 திருமண மண்டங்களில் இருந்து பெற்று வருகிறார் விஜய