மற்றவைவிவசாய செய்திகள்

விளைநிலத்தை அழித்து சாலை போட்டுவிட்டு தனியாக பட்ஜெட் போட்டு என்ன பயன்? சீமான் ஆவேசம்

தஞ்சை: விளைந்து அறுவடைக்கு தயாரக இருக்கும் பயிர் மீது மண்ணைக் கொட்டி பாதையை போடுபவர்கள் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் போடுவதில் என்ன பயன் வரப்போகிறது என்று திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை சந்தித்த பிறகு சீமான் பேசினார்.

திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விளைநிலமாக மாற்ற முடியுமா? அரசியல் வலிமை, அதிகார வலிமை அற்ற எளிய மக்கள் என்பதால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற திமிரில் செய்ததுதான் இது. இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். விளைநிலத்தை மூடிவிட்டு நீங்கள் சாலை போட முடியும். ஆனால், ரோட்டை அழித்து விட்டு மறுபடியும் அதை விளைநிலமாக மாற்ற முடியுமா? வேளாண் குடிமக்களை விடுங்க.. கற்றறிந்தவர்கள் சொல்லுங்க… எப்படி உருவாக்க முடியும்.

வயலில் இறங்கி வேலை செய்ய ஆள் இருக்கா? ஒருவேளை நாங்கள் வருகிறோம். இந்த சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு விளைநிலமாக மாற்றி கொடுக்க முடியுமா என் மக்களுக்கு.. ஆனால் உறுதியாக ஒருநாள் செய்வோம். எனக்கு அப்படி எல்லாம் சாலை ஒன்றும் தேவை இல்லை. பட்ஜெட்டில் பயிர் விளையுமா? பட்ஜெட் போட்டு இரண்டு வருஷம் ஆகிவிட்டது எதாவது மாறுதல் வந்துள்ளதா? விளைநிலைத்தில் இறங்கி வேலை செய்ய ஆள் இருக்கிறதா? 100 வேலை திட்டத்தால் என் மக்களை உழைப்பு மூலம் வெளியேற்றி விட்டார்கள்.

வெற்று திட்டம் வட இந்தியாவில் இருந்து வந்து தஞ்சாவூரில் நாற்று நட்டுக் கொண்டிருக்கிறான். இது எவ்வளவு பெரிய ஆபத்தான போக்கு என்பது உங்கள் அறிவுக்கு எட்டவில்லையா? அவன் நிலத்தையும் அரசியலையும் அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பான் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? உழைப்பில் இருந்து என் மக்களை வெளியேற்றிவிட்டு பட்ஜெட் போட்டால் பயிர் விளையுமா? நிலத்தில் பயிர்களை விளைவிக்க ஆள் வேண்டுமா? இல்லையா? அப்போ.. இது ஒரு ஏமாற்று ஒரு வெற்று திட்டம் என்பது தெரிகிறது.

என்ன பயன் வரப்போகிறது இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு இதுவரை வேளாணுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லையே.. அதிகாரத்திற்கு வரவில்லையென்றாலும் ராமதாஸ் வேளாணுக்கென தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதற்கு பிறகு பட்ஜெட் எப்படி வர வேண்டும் என்று சொன்னது நாங்கள். ஆனால் நீங்கள் இத்தனை காலம் ஆட்சி செய்து புதிதாக நேற்று தான் ஆட்சிக்கு வந்தது போல தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்கிறீர்கள். விளைந்து அறுவடைக்கு தயாராகும் இருக்கும் நிலத்தில் மண்ணைக் கொட்டி பாதை போடும் நீங்கள் தனியாக பட்ஜெட் போட்டு என்ன பயன் வரப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button