
சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஒருவழியாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கோடை வெயில் ரொம்பவே சுட்டெரிக்க, இரண்டு முறை பள்ளிகள் திறப்பையும் தள்ளி வைத்தது தமிழக அரசு. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, நெட்டிசன்கள் ரொம்பவே குஷியாகி அதனை மீம்ஸ் போட்டு கொண்டாடினார்கள்.
அதேபோல், இப்போது பள்ளிகள் திறந்து விட்டது என மாணவர்கள் வருத்தப் படுகிறார்களோ இல்லையோ, வழக்கம் போல் இதனையும் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கொண்டாடத் தவறவில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களின் மனநிலையையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.