
10 பைசா செலவு இல்லாமல் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி? இது 100% வேலை செய்யும்!
பழைய மாடலாக இருந்தாலும் கூட. உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண டிவியை (Normal TV) ஒரு ஸ்மார்ட் டிவியாக (Smart TV) மாற்ற பல வழிகள் உள்ளன. ஆனால் அதை செய்ய, நிச்சயம் சில ஆயிரம் ரூபாயை நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இது அதிகம் செலவு இழுக்காதே ஒரு வழிமுறை மட்டுமல்ல, மிகவும் எளிமையான வழிமுறையும் கூட! இதை செய்ய உங்களுக்கு தேவையானது எல்லாம் எச்டிஎம்ஐ கேபிள் (HDMI Cable) மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) கொண்ட ஒரு லேப்டாப் மட்டுமே ஆகும். பெரும்பாலானோர் வீட்டில் இந்த இரண்டு பொருட்களுமே இருக்கு, என்பதால், இதற்காக புதிதாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை உங்களிடம் எச்டிஎம்ஐ கேபிள் இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ,200 க்குள் நல்ல தரமான பல எச்டிஎம்ஐ கேபிள்கள் கிடைக்கின்றன. அதில் ஒன்றை வாங்கி கொள்ளவும்.
புதிதாக ஒரு எச்டிஎம்ஐ கேபிளை ஆர்டர் போடும் முன்னர், உங்கள் லேப்டாப்பில் எச்டிஎம்ஐ போர்ட் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். பெரும்பாலான லேப்டாப்ளில் இந்த போர்ட் உள்ளது. இருப்பினும் ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. ஏனென்றால் ஸ்லிம் ஆன வடிவமைப்பை பெற்ற சில லேப்டாப்களில் இந்த போர்ட் இடம்பெறுவதில்லை. மாறாக, எல்லாம் சரியான இருந்தால்.. அதாவது உங்கள் லேப்டாப்பில் எச்டிஎம்ஐ போர்ட் இருந்தால், கூடவே உங்களிடம் எச்டிஎம்ஐ கேபிள் இருந்தால்.. கிட்டத்தட்ட பாதி வேலை முடிந்து விட்டது. உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற 20 வினாடிகளுக்கும் குறைவாகவே ஆகும்.