மற்றவைவானிலை செய்திகள்

200 ஆண்டுகளில் இல்லாத ரெக்கார்ட்.. சென்னையை புரட்டிய மழை.. சாலைகளில் தண்ணீர் தேங்கியதா? உண்மை என்ன?

சென்னை: சென்னையில் கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜூன் மாத மழை பெய்து உள்ளது. மிக மிக அரிதாக நடக்கும் இந்த நிகழ்வால் சென்னையில் இரவு முழுக்க மழை கொட்டி தீர்த்தது.

சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை விடாமல் பெய்து வருகிறது. சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.

நந்தனம் – 11.7 செ.மீ. தரமணி – 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ – மேற்கு தாம்பரம் – 8 செ.மீ. நுங்கம்பாக்கம் – 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் – 7.9 செ.மீ. திருவள்ளூர் – 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜூன் மாத மழை பெய்து உள்ளது.

அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

வெள்ளம்: இவ்வளவு மழை பெய்தும் சென்னையில் எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. பொதுவாக சென்னையில் 1 மணி நேரம் மழை பெய்தாலே சாலை வெள்ளக்காடு போல காட்சி அளிக்கும். மெரினா பீச் நடந்து வந்து சிட்டிக்கு உள்ளே டென்ட் போட்டது போல வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

முக்கியமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினால் தினசரி சாலைகளில் வெள்ளத்தை பார்க்க முடியும். அதிலும் டிசம்பர் மாதங்களில் சாலைகளில் ஸ்விம்மிங் அடிக்கும் நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வந்தது.

வடிகால் வசதி: கடந்த 2022ம் சென்னையில் சாலைகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. டிசம்பர் மாதம் 2022 வருடம் மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது சாலைகளின் ஓரம் வெள்ள நீர் வெளியேறுவதற்காக மிகப்பெரிய அளவில் குழாய்கள் அமைக்கப்படும். ஆறுகளில் கலக்கும் வகையில் சென்னை முழுக்க இதற்காக குழாய்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன.

பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் கடந்த வருடம் சென்னையில் வெள்ளம் ஏற்படவில்லை. அதேபோல் இந்த வருடமும் சென்னை மழைக்கு இடையே பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை.

வெள்ளம் இல்லை: அதிகாலையில் இருந்து இவ்வளவு மழை பெய்தும் சென்னையில் எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுமே தண்ணீர் தேங்கியது.

சென்னையில் கத்திப்பாரா பாலம், தி நகரில் உள்ள சில பகுதிகள், நந்தனம் அருகே சில பகுதிகள், மீனம்பாக்கத்தில் சில தெருக்களில் தண்ணீர் தேங்கியது. மற்ற இடங்களில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.

தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. ஆனால் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வேகமாக விடியவில்லை. புறநகர் பகுதிகளில் வேகமாக வெள்ளம் வடியாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.

சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கு எல்லாம் இன்னும் வெள்ள நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அங்குதான் மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடக்கின்றன. சில இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் 1 மணி நேரத்திற்குள் வடிந்துவிடும்.

புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான். மழை முடிந்த பின் அங்கும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கும். அதற்கான பிளான்களை வச்சி இருக்கோம் என்று தெரிவித்து உள்ளனர். அதன்படி சென்னையில் கால்வாய் அமைக்கப்படாத இடங்களில் இந்த சீசனுக்குள் கால்வாய் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button