
2023ல் உலகை தாக்க போகும் மந்த நிலை.. அதிகரிக்க போகும் வேலையிழப்புகள்? வல்லுனர்கள் வார்னிங்!
சென்னை: 2023 உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் – Centre for Economics and Business Research (CEBR) தெரிவித்து உள்ளது. இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020ல் கொரோனா பரவலில் இருந்தே சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட தொடங்கிவிட்டது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட பங்கு சந்தை வீழ்ச்சி, சீன உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு, பல்வேறு உலக நாடுகளில் மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக ஏற்பட்ட செலவினங்கள் இந்த பொருளாதார மந்த நிலையை துரிதப்படுத்தின.
அதன்பின் ஏற்பட்ட ரஷ்யா – உக்ரைன் போர் இந்த மந்தநிலையை இன்னும் வேகப்படுத்தியது. தற்போது மீண்டும் சீனாவின் புதிய கொரோனா அலை ஏற்பட்டு உள்ளது.
மந்தநிலை
இந்த நிலையில்தான் 2023 உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் – Centre for Economics and Business Research (CEBR) தெரிவித்து உள்ளது. சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளின் மொத்த பொருளாதாரம் 100 ட்ரில்லியனை 2022ல் கடந்து உள்ளோம்.
பொருளாதாரம்
இது நல்ல விஷயம். ஆனால் 2023ல் இந்த நிலைமை இருக்காது. 100 டிரில்லியன் உலக பொருளாதாரம் 2023ல் குறையும். பொருளாதார வீழ்த்தி, விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்படும். உலக நாடுகள் அதிக அளவில் கடன் வாங்குவதும், பண வீக்கமும் இதற்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. இந்த கடனுக்கான வட்டியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக அளவில் பொருளாதார மந்தநிலையை வரும் நாட்களில் ஏற்படுத்தலாம்.
பாதிப்பு
இது தொடர்பாக பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மைய இயக்குனர் கே டேனியல் நியூஃபெல்ட், தெரிவிக்கவையில், பணவீக்கம் நம்முடைய மிகப்பெரிய பிரச்சனை. பணவீக்கம் நம்மை பாதிப்பை பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன. பணவீக்கத்தை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் தற்போது மிகப்பெரிய தேவை. ஐஎம்எப் அறிவித்ததை விட நாங்கள் மேற்கொண்ட சோதனையில் சில அதிர்ச்சி அளிக்கும் முடிவுகள் வந்துள்ளன. உலகம் முழுக்க இந்த பண வீக்கம் பாதிப்பை ஏற்படுத்த போகிறது.
பொருளாதாரம்
2023ல் உலகில் உள்ள நாடுகளில் ஒன்றில் மூன்று பங்கு நாடுகள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவர்களின் ஜிடிபியில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்க போகிறது. இதனால் உலக அளவில் மந்த நிலை ஏற்படும். 2037ல் உலகின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இப்போது வளர்ந்து வரும் மத்திய ஆசிய மற்றும் பசிபிக் நாடுகள் 2037 வளர்ந்த நாடுகளாக மாறும். இந்தியாவும் கூட 2035ல் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். ஆனால் அடுத்த வருடம் உலகம் முழுக்க மிகப்பெரிய மந்த நிலை ஏற்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று இதில் குறிப்பிட்டு உள்ளனர்.
முன்னணி பொருளாதாரம்
முன்னதாக முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி உலகில் பல நாடுகளில் மிக மோசமான மந்தநிலை இந்த வருட இறுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்து உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நோரியல் ரொபிணி இதற்கு முன்பே 2008ல் உலகம் முழுக்க பல நாடுகளை புரட்டி போட்ட மந்தநிலை குறித்து துல்லியமாக கணித்து இருந்தார். இந்த நிலையில்தான் இந்த வருடம் இறுதியில் மந்த நிலை தொடங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.இந்த மந்தநிலை மிக மோசமான நிலையை அடையும். அடுத்த வருடம் முழுக்க அமெரிக்காவிலும், உலகில் பெரும்பாலான நாடுகளிலும் மந்த நிலையில் நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த S&P 500 பங்கு சந்தை 30 சதவிகிதம் சரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.