சினிமா செய்திகள்

Baakiyalakshmi: நம்ம ஆளு இல்ல.. மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் கோபி!

விஜய் டிவியின் முக்கியமான தொடராகவும் முன்னணி தொடராகவும் மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.

ஒரு மனிதனின் இருவேறு வாழ்க்கை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகள், சூழல்களை இந்தத் தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது.

இந்தத் தொடரில் கோபியாக நடித்துவரும் சதீஷ், பாக்கியாவாக நடித்துவரும் சுசித்ரா மற்றும் ராதிகாவாக நடித்துவரும் ரேஷ்மா ஆகியோர் கவனத்தை பெற்று வருகின்றனர்.

பாக்கியலட்சுமி புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக தொடர்ந்து நீடித்துவரும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான ப்ரமோக்கள் மற்றும் எபிசோட்களால் களைகட்டி வருகிறது. இந்தத் தொடர் ரசிகர்களின் பேவரைட்டாக இருப்பதற்கு இந்தத் தொடரின் கேரக்டர்களும் முக்கியமான காரணங்களாக உள்ளன. கோபி, பாக்கியா, ராதிகா, கோபியின் பெற்றோர், மகன்கள், மகள் என குறிப்பிட்ட கேரக்டர்களை கொண்டு நிறைவாக இந்தத் தொடரை கொடுத்து வருகிறார் இயக்குநர்.

தான் விரும்பிய வாழ்க்கையை, தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் நாயகன் கோபியின் எண்ணம், இந்த தொடரின் அடுத்தடுத்த கதைக்களங்களாக கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் தன்னுடைய அப்பாவி மனைவியை அவருக்கே தெரியாமல் விவாகரத்து செய்ய முயல்கிறார் கோபி. தன்னுடைய காதலியை மணம் முடிக்கும் அவரது எண்ணத்திற்கு, அவரது மனைவியே உதவி செய்கிறார். கோபி கேட்கும் விவாகரத்தை கொடுத்து அவரை வீட்டை விட்டு போகும்படியும் செய்கிறார்.

இதையடுத்து தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழும் எண்ணத்துடன் ராதிகாவை திருமணம் செய்கிறார். அவரது எண்ணம் போன்ற வாழ்க்கை அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், தன்னுடைய முதல் மனைவி, சிறப்பாக முன்னேறுவதையும், அவரது தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படுவதையும், தன்னை அழகாக்கவும் அவர் செய்யும் முயற்சிகளும் ஒரு கட்டத்தில் கோபிக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. மேலும் ஆங்கில வகுப்பில் உடன் படிக்கும் பழனிச்சாமியுடன் தன்னுடைய மனைவி பேசுவது கோபிக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது.

இதையடுத்து தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழும் எண்ணத்துடன் ராதிகாவை திருமணம் செய்கிறார். அவரது எண்ணம் போன்ற வாழ்க்கை அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால், தன்னுடைய முதல் மனைவி, சிறப்பாக முன்னேறுவதையும், அவரது தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படுவதையும், தன்னை அழகாக்கவும் அவர் செய்யும் முயற்சிகளும் ஒரு கட்டத்தில் கோபிக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. மேலும் ஆங்கில வகுப்பில் உடன் படிக்கும் பழனிச்சாமியுடன் தன்னுடைய மனைவி பேசுவது கோபிக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது.

இதனிடையே தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் நித்தம் ஒரு சண்டை என அவரது நாட்கள் கழிகின்றன. இதனால் அவரை பார்த்தாலே ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்படுகிறார் கோபி. ஆனாலும் அவரை விட்டு விலக முடியாத சூழலில், அவருடன் சண்டையுடன் அவரது நாட்கள் நகர்கின்றன. இதனிடையே, பழனிச்சாமிக்கு பெண் பார்க்கும் படலம் பாக்கியாவின் வீட்டிலேயே நடைபெறுகிறது. தன் முன்னாள் மனைவியைதான் பழனிச்சாமி மணமுடிக்க வந்ததாக நினைத்து தொடர்ந்து பித்து பிடித்தவர் போல அனைவரிடமும நடந்து கொள்கிறார் கோபி. இதை தெரிந்துக் கொள்கிறார் ராதிகா. இந்நிலையில், பழனிச்சாமியிடமும் சென்று தன்னுடைய மனைவியிடம் அவர் பேசக்கூடாது என்ற கோபி சண்டை பிடிக்கிறார். இதுகுறித்து பாக்கியாவிற்கும் தெரியவருகிறது. இந்நிலையில், பழனிச்சாமி தன்னுடைய மனைவியை பெண் பார்க்க வரவில்லை என்பது குறித்து தெரிந்துக் கொள்ளும் கோபியின் மனம் ஆசுவாசப்படுகிறது. பழனிச்சாமி பெண் பார்க்க வந்தது, நம்ம ஆளு இல்ல என்று கூறும் கோபி, ஒரு குத்தாட்டமும் போடுகிறார். தொடர்ந்து அதே உற்சாக மனநிலையுடன் தன்னுடைய மனைவி ராதிகாவிடம் பேசுகிறார். இதையடுத்து பழனிச்சாமி, பாக்கியாவை பெண் பார்க்க வரவில்லை என்ற விஷயத்தையும் ராதிகாவிடம் உளறிக் கொட்டுகிறார். இதையடுத்து இரு தினங்களாக, அவர் குழப்பத்துடன் காணப்பட்டதற்கு இதுதான் காரணமா என்று கேள்வியுடன் கோபப்படுகிறார் ராதிகா. இதையடுத்து எதை செய்தாலும் ராதிகா கண்டுபிடித்து விடுவதாக புலம்பித் தள்ளுகிறார் கோபி. இவ்வாறு இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button