சினிமா செய்திகள்

Chiyaan Vikram: வாண்டட்டாக கதை கேட்ட சீயான் விக்ரம்… திருப்பி அனுப்பிய பிரபல இயக்குநர்

கோலிவுட்டின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம், தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனது.

இந்நிலையில், தான் ஹீரோவாக நடித்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஒருவரிடம் விக்ரம் தேடிப் போய் கதை கேட்டுள்ளார

ஆனால், அந்த பிரபல இயக்குநரோ விக்ரமிடம் கதை இல்லை என சொல்லி திருப்பி அனுப்பியது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

விக்ரமை திருப்பி அனுப்பிய பிரபல இயக்குநர்: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தும் பெரிய ரீச் இல்லாமல் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாக காலம் கடத்தி வந்தவர் விக்ரம். ஆனால், பாலா இயக்கிய சேது திரைப்படம் விக்ரமை உச்சத்தில் கொண்டுபோய் வைத்தது. சேது படத்தின் வெற்றியால் பிஸியான விக்ரம், இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த விக்ரம், தற்போது பா ரஞ்சித்தின் தங்கலான் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஜினியின் தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்க அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால், அதனை விக்ரம் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், விக்ரம் தேடிப்போய் ஒரு இயக்குநரிடம் கதை கேட்க, அவர் சீயானை திருப்பி அனுப்பிய சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

சேது படத்தின் வெற்றிக்குப் பின்னர் மாஸ் ஹீரோவாக வலம் வந்த விக்ரம், தில், ஜெமினி போன்ற படங்களிலும் தரமான சம்பவம் செய்திருந்தார். அதேவரிசையில் வெளியான திரைப்படம் தான் சாமுராய். ஆக்‌ஷன் பிளஸ் பொலிட்டிக்கல் ஜானரில் வெளியான இந்தப் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் முதன்மையான அசோசியேட் டைரக்டர்களில் மிக முக்கியமானவர் பாலாஜி சக்திவேல். இவரது முதல் படமான சாமுராய் 2002ம் ஆண்டு வெளியானது. விக்ரம் தான் ஹீரோவாக நடித்து பாலாஜி சக்திவேலுக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தார். சாமுராய் படம் மிகப் பெரிய வெற்றிப் பெறவில்லை என்றாலும் திரைக்கதை, மேக்கிங் போன்றவை பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. இதனால், மீண்டும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க விருப்பத்துடன் இருந்துள்ளார் விக்ரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button