சினிமா செய்திகள்

Devayani Networth: விஜய் அஜித்துக்கு ஜோடியாக நடித்த தேவயானி… ஆனாலும் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

விஜய், அஜித், கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள தேவயானி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தேவயானியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேவயானியின் நெட்வொர்த் : தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தேவயானி பெங்காலி மொழி படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளம், இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

அதேநேரம் தமிழில் முதல் படத்திலேயே கார்த்திக்குடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தொட்டாசிணுங்கி படத்தில் அறிமுகமான தேவயானி, தொடர்ந்து கல்லூரி வாசல் ஆகிய படங்களில் நடித்தார். அஜித்துடன் ஜோடியாக நடித்த காதல் கோட்டை தேவயானிக்கு மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது. அதன்பின்னர் சரத்குமாருடன் சூர்யவம்சம் படத்தில் தனது அல்வா துண்டு இடுப்பை காட்டி ஆட்டம் போட்டார். தொடர்ந்து விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், கமலுடன் தெனாலி, பஞ்ச தந்திரம் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். ‘நீ வருவாய் என’ படத்தில் நடித்தபோது இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் வர, இருவரும் 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் இணைந்து ‘காதலுடன்’ என்ற படத்தை தயாரித்தனர். அப்போது ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தேவயானிக்கு பல கோடிகள் கடன் ஏற்பட்டது. இதனால், சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்த அவர், ஒருகட்டத்தில் சீரியலில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போதும் சீரியல்களில் நடித்து தான் பிழைப்பு நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் போது பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்த தேவயானியின் தற்போதைய சொத்து மதிப்பு, 10 முதல் 15 கோடி வரை மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. சொந்தமாக ஒரு வீடும் அதுதவிர சில சொத்துகளும் இருக்கிறதாம். அதேபோல், பென்ஸ் கார், ஸ்கோடா கார் மட்டுமே சொந்தமாக வைத்துள்ளார். தற்போது சீரியல்களில் மட்டும் நடித்து வருவதால், சம்பளமும் சில லட்சங்களிலேயே கிடைக்கிறதாம். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கியமான நடிகையாக வலம் வந்த தேவயானியின் தற்போதையை நிலை, முன்பைவிடவும் கொஞ்சம் மோசம் என்றே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், தேவயானி தனது குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button