
சென்னை: கேள்வி கேட்டே கூகுளை ஒரு வழி செய்பவர்களை கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் ஏதாவது ஒரு விசயத்திற்கு அர்த்தம் தெரிய வேண்டும், அல்லது தெளிவு பெற வேண்டும் என்றால் நம்மைவிட அறிவில் மூத்தவர்களையோ அல்லது புத்தகத்தின் உதவியையோ நாடுவோம். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. எதற்கெடுத்தாலும் கூகுள்தான்.
அதுவும் கொரோனா லாக்டவுனில் ஆன்லைனில் படித்த மாணவர்களுக்கு கூகுள்தான் பெரும்பாலும் பாடம் சொல்லித் தரும் ஆசானாகவும், தேர்வு நேரத்தில் பிட் கொடுத்து உதவும் ஆபத்பாண்டவனாகவும் இருந்தது. இதனாலேயே எந்தவொரு சந்தேகம் என்றாலும், ‘கூகுள்ல பாருங்கப்பா’ என்பதே பலரது பதிலாக உள்ளது. ஆனால் கேள்வி கேட்கிறேன் பேர்வழி என சமயத்தில் சிலர் ஏடாகூடமான கேள்வி கேட்டு கூகுளையே தலைசுற்ற வைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கலாய்த்து சமூகவலைதளங்களில் சில மீம்ஸ்கள் உலா வருகின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…