
சென்னை: தந்தையர் தினம் என்பதால் சினிமாவில் வரும் அப்பாக்களையும், நிஜ அப்பாக்களையும் ஒப்பிட்டு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொதுவாக சினிமாவில் காதல், பாசம், கோபம் என எல்லா உணர்ச்சிகளையுமே நிஜத்தைவிட கொஞ்சம் மிகைப்படுத்தித்தான் காட்டுவார்கள். ஆனால் அது புரியாத நம் மக்கள் சினிமாவில் வருவது போலவே, நிஜத்திலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்பை வைத்து, அடிக்கடி சமூகவலைதளங்களில் எதிர்பார்ப்பு மற்றும் நிஜம் என்ற கான்செப்ட்டில் மீம்ஸ்கள் பகிரப்படுவதுண்டு.
தந்தையர் தினமான இன்றும் அப்படி, சினிமாவில் வரும் தந்தைகளையும், நிஜ தந்தைகளையும் வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக.