மற்றவைவிவசாய செய்திகள்

Japanல் அசத்தும் தமிழன், Infosys வேலைவிட்டுட்டு கத்திரிக்காய் வளர்ப்பு..! 2மடங்கு வருமானம்.!!

விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஒரு இளைஞன் பட்டம் பெற்றால் குடும்பம் மொத்தமும் சொல்வது எப்படியாவது மாதம் மாதம் நிலையாக வருமானம் கிடைக்கும் வேலையில் சேர்ந்து விடு என்ற அறிவுரை தான் வரும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் இன்போசிஸ் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால் ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்வில் வெற்றிப்பெற்றுவிட்டோம் என மனநிறைவு தான் வரும்.

இதேபோன்ற நிகழ்வுகள் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி சேர்ந்த விக்னேஷ்-க்கு நடந்துள்ளது. ஆனால் விக்னேஷ் வாழ்க்கையில் சின்ன சின்ன டிவிஸ்ட் உடன் அவரின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

விவசாய குடும்பத்தில் பிறந்து நிலையான வருமானம் பெற வேண்டும் என திட்டத்துடன் படிப்பை முடித்ததும் விக்னேஷ் சென்னையில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். விக்னேஷ்-ன் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது விக்னேஷ் இன்போசிஸ் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்க முடிவு செய்கிறார்.

இந்தியாவில் விவசாயம் செய்தால் ஐடி நிறுவனத்தில் கிடைக்கும் அளவுக்கு மாதம் நிரந்தரமாக வருமானம் கிடைக்குமா என்றால் சந்தேகம் தான். ஆனால் விக்னேஷ் விவசாயத்தில் குறிப்பாக கத்திரிக்கா வளர்ப்பில் இன்போசிஸ் சம்பளத்தை காட்டிலும் 2 மடங்கும் மாதமாதம் சம்பாதிக்கிறார் அதுவும் ஜப்பானில்.. எப்படி..? எங்கு துவங்கியது..? விக்னேஷ் இளம் பருவத்தில் இருந்து விவசாயம் மீது அதிகப்படியான ஆர்வம் கொண்டு இருந்தார், லாக்டவுன் காலத்தில் விவசாயத்துடன் நீண்ட காலம் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது மட்டும் அல்லாமல் விவசாயத்தில் இறங்க முடிவு செய்தார். வழக்கம் போல் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கும் போது ஜப்பான் நாட்டில் விவசாயம் சார்ந்து வாய்ப்பு இருப்பது விக்னேஷ்-க்கு தெரிய வருகிறது. ஒரு நண்பன் மூலம் சென்னையில் ஒரு இன்ஸ்டியூட் ஜப்பானில் வேலைவாய்ப்பு தேடிக்கொள்ள உதவி செய்வது மட்டும் அல்லாமல் அதற்கு அடிப்படை தேவையான ஜப்பானிய மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து பயிற்சியும் அளிக்கிறது தெரிந்துக்கொண்டார். இதை தொடர்ந்து சென்னையில் இருக்கும் Nihon Edutech இன்ஸ்டியூட்-ல் சேர்ந்துக்கொண்டார்.

Nihon Edutech அமைப்பு Confederation of Indian Industry (CII) சேர்ந்து திறன்வாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு தேடிக்கொள்ள உதவி செய்வது மட்டும் அல்லாமல் அதற்கு அடிப்படை தேவையான ஜப்பானிய மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து பயிற்சி அளிக்கிறது. ஜப்பான் நாட்டில் முதியவர்களின் மக்கள் தொகை மிகவும் அதிகம் என்பதால் விவசாய துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் ஜப்பான் நாட்டில் இளம் தலைமுறையினருக்கு உள்ளது. இது இரண்டும் விக்னேஷ்-க்கு உறுதுணையாக இருந்த நிலையில் 6 மாதத்தில் ஜப்பான் மொழி மற்றும் கலாச்சாரத்தில் பயிற்சி பெற்று தேர்வாகி மார்ச் மாதம் ஜப்பான் நாட்டின் Kochi prefecture என்னும் பகுதியில் கத்திர்கை வளர்ப்பு பணியில் சேர்கிறார்.

இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் போது மாதம் 40000 ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த விக்னேஷ் தற்போது ஜப்பான் கத்திரிக்காய் வளர்ப்பு பணியில் வரி, பிடித்தம் அனைத்தும் போக மாதம் 80000 ரூபாய் சம்பாதிக்கிறாராம்.

ஜப்பானில் நிறுவனத்தின் தங்குமிடத்தில் இருப்பதால் வாடகை பிரச்சனையும் இல்லை, உணவுக்கான செலவுகள் மட்டும் தான் என்னுடையது என கூறுகிறார் விக்னேஷ்.

ஜப்பான் விவசாயத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமாக உள்ளது, இங்கு குறைந்த ஊழியர்கள் உடன் அதிகப்படியான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலம் திட்டம் குறித்து மனிகன்ரோல் பேட்டியில் கூறிய விக்னேஷ் ஜப்பானில் கற்றுக்கொண்டதை இந்தியாவிலும் பயன்படுத்தி மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாக விக்னேஷ் கூறுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button