சினிமா செய்திகள்

Kavin Net Worth: முன்னணி ஹீரோ ரேஸில் இடம்பிடித்த கவின்… உயரும் சம்பளம், சொத்து மதிப்பு!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் அறிமுகமான கவின், பிக் பாஸ் சீசன் 3-ல் இன்னும் பிரபலமானார்.

அங்கிருந்து சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய கவினுக்கு, லிஃப்ட், டாடா படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் தற்போது முழுநேர ஹீரோவாகிவிட்டார் கவின். இந்நிலையில் இன்று 33வது பிறந்தநாள் கொண்டாடும் கவினின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

நடிகர் கவின் நெட்வொர்த் : விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான கவின் அப்படியே படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அடித்த அட்ராசிட்டியால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனால் லிஃப்ட் படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான டாடா படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் முன்னணி ஹீரோக்களின் ரேஸில் இடம்பிடித்துள்ள கவின், அடுத்தடுத்து தரமான கூட்டணியில் இணைந்து வருகிறார். அதில் முதலாவதாக அனிருத் இசையில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுதவிர மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளாராம் கவின்.

இந்நிலையில் கவின் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். திருச்சியை பூர்விகமாக கொண்ட கவின், சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல்களில் நடித்தபோதே லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கவின், இப்போது கோடிகளில் கமிட்டாகி வருகிறாராம்.

அதன்படி, லிஃப்ட், டாடா படங்களின் வெற்றிக்குப் பின்னர் ஒரு படத்துக்காக 1.5 முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் கவின். இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம். இதனடிப்படையில் கவினின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார் கவின். டாடா படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவினின் மார்க்கெட் வேல்யூ கூடியுள்ளதால், இனிவரும் நாட்களில் அவரின் சம்பளம், சொத்து மதிப்பு ஆகியவை அசுர வேகமெடுக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், இன்னும் இரண்டு அல்லது 3 படங்கள் ஹிட் கொடுத்துவிட்டால் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் கவினுக்கும் ஒரு இடம் கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button