சினிமா செய்திகள்

Vijay: தமிழில் மட்டும் வெளியாகும் நா ரெடி பாடல்.. அப்ப மற்ற மொழிகளில்?

நடிகர் விஜய் இன்றைய தினம் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளை திருவிழாவாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிறந்தநாளையொட்டி விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நா ரெடியும் வெளியாகவுள்ளது.

விஜய் -லோகேஷ் கனகராஜ் இணைந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை லியோ படத்திற்கு ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.

தமிழில் மட்டும் வெளியாகும் நா ரெடி பாடல்: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்து நடித்து வருகிறது. படத்தில் வயதான கேங்ஸ்டராக விஜய் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படம் LCU இணையுமா என்பது குறித்து விரைவில் அப்டேட் வெளியிட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்

இந்தப் படத்தின் டைட்டில் டீசர், போஸ்டர்கள், காஷ்மீர் சூட்டிங் வீடியோக்கள் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தொடர்ந்து கொடுத்து வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் விஜய்யின் காமன் டிபி, ரசிகர்களின் வீடியோக்கள் உள்ளிட்டவையும் தொடர்ந்து இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

இதனிடையே, இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நா ரெடியும் இன்றைய தினம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாடலின் ப்ரமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ள நிலையில், பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அடுத்ததாக லியோ படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள நா ரெடி பாடல் தமிழில் மட்டுமே வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் லியோ படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளதாகவும் லலித்குமார் கூறியுள்ளார்.

இந்தப் பாடலில் துப்பாக்கி படத்தின் விஜய்யை பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். நூறு சதவிகிதம் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கி படத்தில் மிகவும் ஸ்டைலான லுக்கில் விஜய் நடித்திருந்தார். பாடல்களிலும் மாஸ் காட்டியிருந்தார். அந்தப் படத்தின் லுக்குடன் தற்போது லியோ படத்திலும் விஜய் காணப்படுவார் என்று லலித்குமார் கூறியுள்ளது ரசிகர்களை மேலும் வசீகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button