
அநியாயத்துக்கு குட்டி டவுசரில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை…ஏடாகூட கேள்வி கேட்கும் ஃபேன்ஸ்!
எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி குட்டி டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த போட்டோவைவை பார்த்த பேன்ஸ் ஏடாகூடமான கேள்வியை கேட்டு வருகின்றனர்.
தொகுப்பாளி டிடி தனது அழகான பேச்சாலும், க்யூட்டான அழகாலும் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுவார்.
தங்கையைப் போலவே க்யூட்டானவர் தான் பிரியதர்ஷினி இவரும் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
தொகுப்பாளினி: நடிகை பிரியதர்ஷினி பாக்யராஜ் இயக்கிய தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, இதயக்கோவில், உயிரே உனக்காக ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விழுதுகள் சீரியலில் நடித்துள்ளார்.
நல்ல டான்சர்: ஆங்கராக மட்டுமில்லாமல் சன் டிவியில் வானிலை செய்தி வாசிப்பாளராகவும் இருந்த பிரியதர்ஷினி கலைஞர் தொலைக்காட்சியில் படவரிசை பத்து என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்: சில ஆண்டுகள் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த பிரியதர்ஷினி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கேரக்டரில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீரியலில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
என்ன ரேணுகா இதெல்லாம்: ஓய்வு நேரங்களில் தனது கணவருடன் சுற்றுலா செல்வதில் ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி தனத மாலத்தீவில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் என்ன ரேணுகா இதெல்லாம் என்றும், உங்கள் மாமா குணசேகரன் இந்த போட்டோவை பார்த்தா என்னாகும் என்று மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரியாதர்ஷினி தொகுப்பாளினியாக இருந்த போது, ரமணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியதர்ஷினியின் மகன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அவரது தந்தைக்கு இணையான உயரத்தில் ஹீரோ போல இருக்கிறார்.