
ஆஹா.. அந்த குட்நியூஸ் வரப்போகுதா? புரட்டி எடுக்கும் வானிலை.. தமிழ்நாடு வெதர்மேன் இப்படி சொல்கிறாரே?
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்! உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.
காலநிலை மாற்றம்: ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான “கோட் ரெட்” எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது..
செந்தில் பாலாஜிக்கு வந்ததை விட EPS-க்கு இன்னும் மோசமாக வரும் – மனுஷ்யபுத்திரன் , திமுக இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்…. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பால் வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. சென்னை வானிலை: சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
தமிழ்நாடு பிற பகுதிகள் வானிலை: தமிழ்நாட்டில் கோடை காலம் நிறைவு பெற்று மழைக்காலம் தொடங்க வேண்டியதற்கான காலம் நெருங்கிவிட்டாலும் இன்னும் வெயில் குறையவில்லை. முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.
வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
வெதர்மேன் போஸ்ட்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இந்த வெப்பநிலை வரும் 10, 11ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் மோசமான வெப்பநிலை காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு குட் நியூஸ் விரைவில் வழங்கப்படலாம் என்று கூறி உள்ளார். இதையடுத்து நெட்டிசன் ஒருவர் இந்த வெப்பநிலை எப்போது குறையும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு.. 10/11ம் தேதி வரை வெப்பநிலை இருக்கும். அதன்பின் வெயில் குறையும். 12ம் தேதி பள்ளியை திறப்பது சரியாக இருக்கும், என்று கூறி உள்ளார்.