
இந்திய வீரர்களை அவமானப்படுத்திய பாக். வீரர்.. பயத்தை தரக்கூடிய ஒரு பவுலர் கூட இல்லையாம்
லாகூர் : இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் பற்றி ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினால் ஊடகங்கள் வெளிச்சம் படும். இதனால், இப்படி வாய்க்கு வந்த கருத்தை சொல்வதில் மற்ற நாட்டு வீரர்கள் குறியாக இருக்கிறார்கள்.
அதுவும் பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் எல்லாம், கடைசியாக 2017ஆம் ஆண்டு தான் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். டி20 போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்காக 2019ஆம் ஆண்டு விளையாடினார்.
இதனால் தம்மை யாரும் மறந்து விட கூடாது என்பதற்காக அகமது சேஷாத், இப்படி ஒரு பேட்டியை கூறியுள்ளார். அதில், இந்திய கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை தரக்கூடிய எந்த ஒரு பந்துவீச்சாளரும் இல்லை என்றும், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் போன்று நல்ல பந்துவீச்சளர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், எதிரணிக்கு ஆபத்தை தரக்கூடிய பவுலர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
எனினும் இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணிக்கு பயத்தை தரக்கூடிய வகையில் விளையாடுவார்கள் என்று குறிப்பிட்ட அகமது சேஷாத், இதனை இந்திய வீரர்களை அவமரியாதையாக பேச வேண்டும் என்பதற்காக இவ்வாறு நான் பேசவில்லை என்றும் அகமது சேஷாத் கூறியுள்ளார்.
தாம் பார்த்து பயந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது சோயிப் அக்தர் தான் என்றும், எனினும் வேகப்பந்துவீச்சாளர்களை பார்த்து பயந்தால் , நம்மால் பந்தை கவணிக்க முடியாது என்றும் அகமது சேஷாத் கூறினார். விராட் கோலியிடம் நல்ல நட்பு இருப்பதாகவும், தமக்கு கிரிக்கெட் தொடர்பான சந்தேகங்கள் ருந்தால் அவரிடம் கேட்பேன், எனக்காக எப்போதும் அவர் பதில் அளிப்பார் என்றும் அகமது சேஷாத் கூறினார்.