மற்றவைவானிலை செய்திகள்

இன்று வீட்டை விட்டு வெளியே போறீங்களா? சென்னை மக்களுக்கு மிக முக்கிய செய்தி! இதை முதலில் படிச்சிடுங்க

சென்னை: இன்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் முன் இதை கொஞ்சம் படித்துவிட்டு செல்லுங்கள்.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.

ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு வானிலை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இப்படிப்பட்ட நிலையில்தான் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மோச்சா புயல் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக மாறி உள்ளது.

மோச்சா புயல் அதி தீவிர சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை மையம் கொடுக்கும் புள்ளிகளின் அடிப்படையில் பார்த்தால் இது சூப்பர் சூறாவளியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புயல் மியான்மர் கடற்கரையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இது மியான்மரை 175 கிமீ வேகத்தில் தாக்கும் என்று கூறப்படுகிறது. இன்று மாலை புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வெப்பநிலை அதிகரிக்கும்: தமிழ்நாட்டில் புயல் தாக்காது. அதே சமயம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து செல்லும். இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.

இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.

கவனம்: இன்று சென்னையில் வெப்ப அலையும் வீசும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இன்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் முன் வெயிலுக்கு தயாராகிவிட்டு செல்லுங்கள்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பது, மிதமான உணவுகளை சாப்பிடுவது, பழங்கள் சாப்பிடுவது, டீ, காபி போன்றவற்றை குறைப்பது, உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பது போன்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button